சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி. இவரது ஒரே மகன் வெற்றி துரைசாமி (45). சினிமா துறையிலும் ஆர்வம் கொண்டவர். இந்நிலையில், கடந்த 4ம் தேதி தனது நண்பர் திருப்பூரை சேர்ந்த கோபிநாத் என்பவருடன் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். சுற்றுலாவை முடித்து விட்டு சென்னை திரும்புவதற்காக இன்னோவா காரில் விமான நிலையத்துக்கு புறப்பட்டார்.
கார் காசாங் நாலா தேசிய நெடுஞ்சாலையில் வந்துக்கொண்டிருந்த போது திடீரென கார் ஓட்டுநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால், கார் சாலையில் தாறுமாறாக ஓடி மலைப்பகுதியில் இருந்து கவிழ்ந்து 200 அடி சறுக்கி சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் கோபிநாத் என்பவர் படுகாயங்களுடன் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், காரில் பயணம் செய்த சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் நிலை என்ன என்பது தெரியாமல் தீவிர தேடுதல் நடந்து வந்தது.
இமாச்சலப்பிரதேத்தில் சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் உடல் 8 நாட்களுக்கு பிறகு சட்லஜ் நதியில் இருந்து மீட்பு பிரேத பரிசோதனைக்காக வெற்றியின் உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


எவ்வளவோ மனிதர்களுக்கு இலவச பயிற்சி கொடுத்த குடும்பம்,அவர்களுக்கு இறைவன் கருணை காட்டியிருக்க கூடாதா?
சைதை துரை சாமியின் மகன் வெற்றி துரைசாமியின் மறைவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்