Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் எதுவும் இல்லை, உப்பு சப்பு இல்லாத ஊசிப்போன உணவு பண்டம் : கலாய்த்த EPS.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 12, 2024
in Default
1
மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் எதுவும் இல்லை, உப்பு சப்பு இல்லாத ஊசிப்போன உணவு பண்டம் : கலாய்த்த  EPS.
26
SHARES
42
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஆளுநர் உரையில் எந்த புதுவித திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்  எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2024ம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்று கூறி ஆளுநர் உரையை வாசிக்க மறுத்து அமர்ந்த நிலையில், ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்து முடித்தார். இதையடுத்து தேசிய கீதம் வாசிப்பதற்கு முன்னரே ஆளுநர் ரவி அவையை விட்டு வெளியேறினார். 

இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், “ஆளுநர் உரை ஊசிப்போன பண்டம், உப்புசப்பில்லாதது” என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

சட்டமன்றத்திற்கு வெளியே தனது கட்சி உறுப்பினர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “ஆளுநர் உரையை படிக்க மறுத்தது அரசுக்கும், ஆளுநருக்கும், சபாநாயகருக்கும் இடையே உள்ள பிரச்சனை, அதைப்பற்றி அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.

சட்டமன்றத்தில் ஆர்.என்.ரவி

சட்டமன்றத்தில் ஆர்.என்.ரவி

தமிழக அரசு தயாரித்த கவர்னர் உரையில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை. மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் எதையும் அரசு அறிவிக்கவில்லை. தமிழக அரசு தயாரித்த கவர்னர் உரை, உப்பு சப்பு இல்லாத ஊசிப்போன உணவு பண்டம். அதிமுக ஆட்சிக் காலத்தில் நாங்கள் கொண்டு வந்ததைத்தான் தற்போது செயல்படுத்தி வருகிறார்கள்” என்றார்.

Previous Post

‘டெல்லி சலோ’ பேரணி : விவசாயிகள் போராட்டத்தை முன்னிட்டு தலைநகரில் 144 தடை உத்தரவு..

Next Post

சொகுசு பேருந்தில் மோதி தீப்பிடித்த கார்… உடல் கருகி 5 பேர் பலியான சோகம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சொகுசு பேருந்தில் மோதி தீப்பிடித்த கார்… உடல் கருகி 5 பேர் பலியான சோகம்!

சொகுசு பேருந்தில் மோதி தீப்பிடித்த கார்... உடல் கருகி 5 பேர் பலியான சோகம்!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    இவர் போட்ட பட்ஜெட்டில் மட்டும் உப்பு சப்பு காரம் எல்லாம் இருந்துச்சாக்கும். எதையாவது ஒரு குறையை சொல்லி பொதுமக்களை ஏமாற்ற வேண்டியது இவர்களது வேலை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In