
2 நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் பிரதமர் மோடி அபுதாபியில் முதல் இந்து கோயிலை திறந்து வைக்கிறார்.
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக பிப்ரவரி 13,14ஆம் தேதிகளில்ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். இந்த பயணத்தின்போது அபுதாபியில் முதல் இந்து கோவிலை அவர் திறந்து வைக்கிறார்.
பின்னர் அமீரக அதிபர் முகமது பின் சயீத் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்துப் பேசும் பிரதமர் மோடி, 2024 உலக அரசு உச்சி மாநாட்டிலும் பங்கேற்கிறார். தொடர்ந்து அபுதாபியில் வாழும் இந்திய மக்களை சந்தித்தும் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
2015ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மேற்கொள்ளும் ஏழாவது பயணம் இதுவாகும். கடந்த 8 மாதங்களில் இது மூன்றாவது முறையாகும்.


அபுதாபியில் இந்து கோயில் திறப்பதை நான் வரவேற்கிறேன் அங்குள்ள இந்துக்கள் தெய்வத்தை வழிபட ஒரு நல்ல சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தந்திருக்கிறார் நரேந்திர மோடி