Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அறுவை சிகிச்சை அறையில் ரொமான்ஸ்; டாக்டர் மீது பாய்ந்தது நடவடிக்கை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 10, 2024
in Default
0
அறுவை சிகிச்சை அறையில் ரொமான்ஸ்; டாக்டர் மீது பாய்ந்தது நடவடிக்கை!
73
SHARES
117
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கர்நாடகாவில் அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அறையில் வருங்கால மனைவியுடன் போட்டோஷூட் நடத்திய மருத்துவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில், அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அறையில், மருத்துவர் ஒருவர் தன்னுடைய வருங்கால மனைவியுடன் திருமண போட்டோஷூட் நடத்திய நிகழ்வு தற்போது வெளியில் தெரியவந்திருக்கிறது. இந்த சம்பவம் கடந்த புதன்கிழமையன்று நடந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்த போட்டோஷூட் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது.

போட்டோஷூட் நடத்திய மருத்துவர்
போட்டோஷூட் நடத்திய மருத்துவர்

அதில், ஆண் மருத்துவர் தன்னுடைய வருங்கால மனைவியுடன், சிகிச்சை அறையில் மருத்துவ உபகரணங்களுடன் ஒருவருக்கு சிகிச்சை செய்வதுபோல நடிக்க, புகைப்படக்காரர்கள் படம் எடுத்துக்கொண்டிருந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவ, இதனையறிந்த மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட மருத்துவரை பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறது.

இதுகுறித்து பேசிய சித்ரதுர்கா மாவட்ட மருத்துவ அதிகாரி ரேணு பிரசாத், “தேசிய சுகாதார இயக்கம் (NHM) மூலம் ஒரு மாதத்துக்கு முன்பு அவரை மருத்துவ அதிகாரியாக ஒப்பந்த அடிப்படையில் நியமித்தோம். இந்த சம்பவத்தில் வரும் அறுவை சிகிச்சை அறை செப்டம்பர் முதல் செயல்பாட்டில் இல்லை. தற்போது அது பழுதுபார்க்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

மேலும், கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், “சித்ரதுர்கா அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அறையில் திருமண போட்டோஷூட் நடத்திய மருத்துவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். அரசு மருத்துவமனைகள் மக்களின் சுகாதாரத்துக்காக இருக்கிறதே தவிர, தனிப்பட்ட வேலைக்காக அல்ல. எனவே மருத்துவர்களின் இத்தகைய ஒழுங்கீனத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாது.

போட்டோஷூட் நடத்திய மருத்துவர்
போட்டோஷூட் நடத்திய மருத்துவர்

சுகாதாரத்துறையில் பணியாற்றும் மருத்துவர்கள், அதிகாரிகள் உட்பட அனைத்து ஒப்பந்த ஊழியர்களும் அரசு சேவை விதிகளின்படி பணிபுரிய வேண்டும். மேலும், அரசு மருத்துவமனைகளுக்கு அரசு வழங்கும் வசதிகள் சாதாரண மக்களின் சுகாதாரத்துக்கானது என்பதை அறிந்து கடமையைச் செய்வதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Previous Post

12 லட்சத்துக்கும் அதிகமான வண்ண மலர்கள் : செம்மொழிப் பூங்கா மலர்கண்காட்சி துவக்கம்..

Next Post

அரசியலுக்கு வருகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்? புது கொடியை அறிமுகப்படுத்திய ரசிகர் படை..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அரசியலுக்கு வருகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்? புது கொடியை அறிமுகப்படுத்திய ரசிகர் படை..!

அரசியலுக்கு வருகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்? புது கொடியை அறிமுகப்படுத்திய ரசிகர் படை..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In