பிரதமர் நரேந்திர மோடி தனது ஜாதியை மறைத்து பொய் கூறியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை கடுமையாக விமர்சித்துள்ளார். ஒடிசாவின் ஜார்சுகுடாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர், ‘பிரதமர் மோடி ஓபிசி அல்ல, டெலி எனும் உயர் சாதியைச் சேர்ந்தவர்’ என்று கூறினார்.
“பிரதமர் மோடி ஓபிசி பிரிவில் பிறக்கவில்லை. அவர் குஜராத்தில் தெலி இனத்தில் பிறந்தவர், 2000 ஆம் ஆண்டு பாஜகவால் தான் தெலி ஜாதி ஓபிசி பிரிவில் இணைக்கப்பட்டது. எனவே அவர் உயர் ஜாதியில் பிறந்தவர்… அவர் ஓபிசியில் பிறக்கவில்லை, உயர் ஜாதியில் பிறந்தவர் என்பதால், ஜாதி மக்கள் தொகை கணக்கெடுப்பை முழுவதுமாக நடத்த அனுமதிக்க மாட்டார்” என்று ராகுல் காந்தி கூறினார்.
முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளத்தையும் (பிஜேடி) குறிவைத்து காங்கிரஸ் தலைவர் தாக்கி கூறினார். பிஜேபியும் பிஜேடியும் ஆதிவாசிகளை மோசமாகவே நடத்துகின்றனர், இந்த இரு கட்சிகள் இடையில் வேறுபாடே இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

