அண்ணாமலை லேகியம் விற்பதுபோல் பேசுகிறார், தேர்தலில் நின்று வெற்றிப்பெற்றால்தானே பக்குவம் வரும். இன்னும் அவருக்கு பக்குவம் வரவில்லை” என்று மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி அளித்துள்ளார்.
லேகியம் விற்பவர் போல் அண்ணாமலை பேசிக் கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார். அதிமுகவை அழிக்க அண்ணாமலை அல்ல, அவரது தந்தையே வந்தாலும் முடியாது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காட்டமாக குறிப்பிட்டார்.

