நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் கரியாப்பட்டினம் கடைத்தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேதாரண்யம் வடக்கு ஒன்றியக்குழு சார்பில் கருகும் பயிரைக் காப்பாற்ற பாசனத்திற்கு உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
மறியலுக்கு CPIM மாவட்ட செயற்குழு உறுப்பினர் A.வேணு தலைமை வகித்தார். CPIM ஒன்றியச் செயலாளர் A.வெற்றியழகன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் S. அம்பிகாபதி, S. முருகையன், M.பாலசுப்பிரமணியன், A. நடராசன், கே சூர்யா மோகன் G.ராசாமாணிக்கம், P.சதாசிவம் மற்றும் கிளைச் செயலாளர்கள்கட்சி நிர்வாகிகள்,தோழர்கள் கலந்து கொண்டனர்.
இதனிடையே தகவலறிந்து வேதாரண்யம் காவல் துறை துணை கண்கானிப்பாளர், நீர்வளத்துறை அதிகாரிகள் போராட்டகாரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டு சாலை மறியல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.




விவசாயத்திற்கு முன்னுரிமை தந்து உடனடியாக தண்ணீரை திறந்து விட வேண்டும்