Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

திமுக எம்.எல்.ஏ மகன், மருமகள் ஜாமீன் மனு: பாதிக்கப்பட்ட பணிப்பெண் பதிலளிக்க உத்தரவு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 31, 2024
in Default
1
திமுக எம்.எல்.ஏ மகன், மருமகள் ஜாமீன் மனு: பாதிக்கப்பட்ட பணிப்பெண் பதிலளிக்க உத்தரவு!
7
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன் மருமகள் ஜாமீன் கேட்டுத் தொடர்ந்த வழக்கில், அவர்கள் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்  பதிலளிக்க நீதிமன்றம் இன்று (ஜனவரி 31) உத்தரவிட்டது.

சென்னை பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் ஆண்டோ மதிவாணன், மருமகள் மெர்லினா வீட்டில் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ரேகா என்ற இளம் பெண் பணியாற்றி வந்தார்.

அப்போது, மெர்லினா மற்றும் குடும்பத்தினர் தன்னை அடித்து துன்புறுத்தியதாக நீலாங்கரை போலீசில் ரேகா புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் ஆண்டோ மதிவாணன் மற்றும் மெர்லினா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து தலைமறைவான இருவரும், கடந்த ஜனவரி 25ஆம் தேதி தமிழ்நாடு – ஆந்திரா எல்லையில் தனிப்படை போலீசாரிடம் சரண் அடைந்தனர்.

அவர்களைக் கைது செய்து அழைத்து வந்த போலீசார், பிப்ரவரி 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில்ஆண்டோ மதிவாணன், மெர்லினா இருவரும் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அதில், “பணிப்பெண்ணைத் தாக்கியதாகவும் துன்புறுத்தியதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை. அவரை தங்களது குடும்ப உறுப்பினர் போல தான் நடத்தினோம். அவர் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கான கட்டணத்தையும் நாங்களே செலுத்தினோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி விடுமுறை என்பதால் இம்மனு நீதிபதி ஆனந்த் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் எம்.சுதாகர் ஆஜராகி, “எஸ்.சி., எஸ்.டி பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பதிலை கேட்க வேண்டும். இதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

இதை ஏற்று இருவரின் ஜாமீன் மனுவுக்கு காவல்துறையும், பாதிக்கப்பட்ட பெண்ணும் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையைப் பிப்ரவரி 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Previous Post

‘ரஜினிகாந்த் சங்கி தான்’… கன்னட நடிகர் போட்ட அதிரடி ட்வீட்!

Next Post

பேடிஎம் வங்கி செயல்பாடுகளை நிறுத்த ஆர்.பி.ஐ உத்தரவு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பேடிஎம் வங்கி செயல்பாடுகளை நிறுத்த ஆர்.பி.ஐ உத்தரவு

பேடிஎம் வங்கி செயல்பாடுகளை நிறுத்த ஆர்.பி.ஐ உத்தரவு

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    எந்த வழக்காக இருந்தாலும் நீதிமன்ற ஜாமீன் கிடைப்பது உறுதி. இருப்பினும் ஒரு ஆளுங்கட்சி எம்எல்ஏவின் மகன் மருமகளை கைது செய்து சிறையில் வைத்தது மிகப்பெரிய சாதனை. இது பத்திரிகையாளர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In