அமெரிக்காவே அதிர்ந்துபோயுள்ளது. ஆம். அமெரிக்க அதிபர் ஜோ பைடனைக் கொல்வதற்காகக் கடந்த ஆறு மாதங்களாக சதித் திட்டம் தீட்டப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த சதித் திட்டத்தைச் செயல்படுத்தும் விதமாக வெள்ளை மாளிகைச் சுவரில் லாரியைக் கொண்டுபோய்க் கடும் வேகத்தில் மோத வைத்துள்ளான் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாய் வர்ஷித் எனும் இளைஞன்.

