மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, வருகின்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு வாக்களிக்காவிட்டால் மத்திய புலனாய்வு அமைப்புகள் தங்கள் வீடுகளுக்கு அனுப்புவோம் என பாஜக மக்களை மிரட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
குடியுரிமை சட்டம் அல்லது சிஏஏவில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இருப்பதை உறுதி செய்ய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைமை அறிவுறுத்தியது.

இது தொடர்பாக மம்தா பானர்ஜி தெரிவித்திருப்பதாவது, ”மத்திய அமைப்புகளை பா.ஜ.க தேர்தலுக்கு பயன்படுகிறது. அமலாக்க இயக்குநரகம் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு தங்களது வீட்டிற்கு அனுப்புவோம் என தொலைபேசி வாயிலாக மக்களை மிரட்டுகிறது.
நான் ராமாயணம், குரான், பைபிள் போன்றவற்றை பின்பற்றுகிறேன். வெளியில் இருந்து கொண்டு வரப்படும் உணவை சாப்பிடுவதற்காக ஏழைகளின் வீடுகளுக்கு சென்று நாடகம் போடுவதில்லை” என தெரிவித்துள்ளார்.

