Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தொப்பை, தொந்தி போட்டவங்களுக்கு இனி ராணுவத்துல வேலை இல்ல..! அதிரடி கொள்கை அறிவிப்பு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 29, 2024
in Default
1
தொப்பை, தொந்தி போட்டவங்களுக்கு இனி ராணுவத்துல வேலை இல்ல..! அதிரடி கொள்கை அறிவிப்பு!
27
SHARES
43
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

இந்திய ராணுவம், “அதிகாரிகளிடையே குறைந்து வரும் உடல் தரத்தை” கருத்தில் கொண்டு புதிய உடற்பயிற்சி கொள்கையைக் கொண்டு வந்துள்ளது.

இந்திய ராணுவத்தில் “அதிகாரிகள் மத்தியில் குறைந்து வரும் உடல் தகுதி” (ஃபிட்னஸ்) மற்றும் “வாழ்க்கைமுறை நோய்களின் அதிகரிப்பு” ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு  புதிய கொள்கையை இந்திய ராணுவம் கொண்டு வந்திருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய உடற்பயிற்சி கொள்கை தொடர்பாக அனைத்து படைப்பிரிவினருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ராணுவத்தில் பணியாற்றுபவர்களுக்கு உடல் தகுதி மதிப்பீட்டு அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய கொள்கையில் தற்போதுள்ள சோதனைகளுடன் கூடுதலாக மேலும் சோதனைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

ராணுவத்தில் உள்ள வெவ்வேறு வயதினருக்கான உடல் தரநிலைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

28 வயது முதல் 48 வயது வரை மற்றும் அதற்கு மேலான வயதுடைய ராணுவ அதிகாரிகளுக்குக் குறைந்த பட்ச எடையளவு, அதிகபட்ச எடையளவு நிர்ணயிட்டப்பட்டுள்ளன.

புதிய கொள்கையின்படி, அதிகாரிகள் காலாண்டு சோதனைகளை எதிர்கொள்ள வேண்டும்.

இதில், BPET எனப்படும் போர் உடல் திறன் தேர்வில் தனிநபர்கள் 5 கிமீ ஓட்டம், 60 மீட்டர் ஓட்டம் (ஸ்பிரிண்ட்), செங்குத்தான கயிற்றில் ஏறுதல், கிடைமட்ட கயிற்றில் ஏறுதல், 9 அடி பள்ளத்தை வயது அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் கடந்து செல்லுதல் உள்ளிட்ட தேர்வுகள் இடம்பெற்றுள்ளன.

PPT எனப்படும் உடல் திறன் தேர்வில் 2.4 கிமீ ஓட்டம், 5 மீ ஷட்டில், புஷ்-அப், சிட்-அப், 100 மீட்டர் ஸ்பிண்ட் ஓட்டம், நீச்சல் உள்ளிட்ட தேர்வுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த தேர்வுகளின் முடிவுகள் வருடாந்திர ரகசிய அறிக்கையில் இடம் பெறும் என்றும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கொள்கையின்படி, அதிக எடை கொண்ட ராணுவ அதிகாரிகளின் உடல் தகுதியில் 30 நாட்களுக்குள் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றால், ராணுவ ஒழுங்குமுறை (AR) 15 மற்றும் ராணுவச் சட்டம் (AA) 22 ஆகியவற்றின் கீழ் சாத்தியமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous Post

2024 தேர்தலில் மோடி வெற்றி பெற்றால் இந்தியாவில் அதன்பின் தேர்தல் நடத்தப்படாது: எச்சரிக்கும் கார்கே..!

Next Post

தொடர் பேனர் விழும் சம்பவங்கள்; 2 நாட்களில் இரண்டு பேர் படுகாயம்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தொடர் பேனர் விழும் சம்பவங்கள்; 2 நாட்களில் இரண்டு பேர் படுகாயம்..

தொடர் பேனர் விழும் சம்பவங்கள்; 2 நாட்களில் இரண்டு பேர் படுகாயம்..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    ஒருவேளை உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற இயலாதவர்கள் யுத்த பணிக்கு பதிலாக வேறு பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் ராணுவத்தில் யுத்தத்திற்கு துணையாக இருக்கும் பல பிரிவுகள் உள்ளன அவற்றில் ஏதாவது ஒன்றில் அவர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும் பணி நீக்கம் செய்யக்கூடாது

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In