2023-ம் ஆண்டில் மட்டும், சுமார் 14 லட்சம் இந்தியர்களுக்கு அமெரிக்க விசாக்களை வழங்கியுள்ளதாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
2022-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்தியர்களின் விண்ணப்பங்கள், சுமார் 60% அதிகரித்துள்ளது.
மேலும் உலகளவில் பெறப்பட்ட அமெரிக்க விசா விண்ணப்பங்களில் பத்தில் ஒருவர் இந்தியராக உள்ளதாகவும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த செய்தி ஒருபுறம் இருக்க பத்தாண்டுகள் முன்பு, “நான் பிரதமர் ஆனால் அமெரிக்கா காரன் விசாவுக்கு கியூவில் நிற்பார்கள்” என்று தற்போதைய பிரதமர் மோடி கூறியிருந்தார், ஆனால் இன்று நிலைமை தலைகீழாக உள்ளது என்று நேட்டீசன்கள் பிரதமர் மோடி அவர்கள் முந்தைய தேர்தல் நேர பேச்சுகள் குறித்து விமர்சித்து வருகின்றனர்.


இந்திய மக்கள் இந்தியாவை விட்டு தப்பி ஓடுவதில் உள்ள ஆர்வத்தையே இந்த அமெரிக்க விசா விஷயம் காட்டுகிறது