பாடகி பவதாரிணி மறைவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் “மயிலிறகாய்த் தமிழர் மனதையெல்லாம் வருடிய பவதாரிணியின் மதுரமான குரல் இன்றும் ஆகாயத்தில் மலர்கிறது.
காற்றெல்லாம் தீரா அதிர்வெழுப்பிக் ககனவெளியெங்கும் கதிரொளியாய் விரிகிறது. இசைஞானி இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா இந்த துனபகரமான வேளையில் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” என்று ரஹ்மான் ட்வீட் செய்துள்ளார்.

