Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டுத் தலைவராக உருவாக நினைத்ததில் படு தோல்வி அடைந்து விட்டனர் திமுக.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 22, 2024
in Default
0
உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டுத் தலைவராக உருவாக நினைத்ததில் படு தோல்வி அடைந்து விட்டனர் திமுக.
44
SHARES
71
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கோடி கோடியாக வாரி இறைத்து நடைபெற்ற திமுக மாநாடு எழுச்சி மாநாடு அல்ல திமுக வீழ்ச்சி மாநாடு என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

திமுக இளைஞர் அணி மாநாடு

திமுக இளைஞர் அணி மாநாடு

திமுக இளைஞரணி மாநாடு கேலிக் கூத்தாக நடைபெற்றுள்ளது. மாநாட்டில் தலைவர்கள் பேசும்பொழுது தொண்டர்கள் தலைகள் அதிகமாக தெரியும், இது உலக சாதனை படைக்கும் என்று அமைச்சர்கள் கூறினார்கள். ஆனால், தலைவர்கள் பேசும்பொழுது மக்கள் அங்கு இல்லை காலி சேர்கள் தான் காட்சியளித்தது. அது மட்டுமல்ல மாநாட்டில் கலை நயத்துடன் ஆட்சியின் சாதனையை விளக்கிக் கலை நிகழ்ச்சி நடைபெறும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார். ஆனால் அங்கோ மக்கள் முகம் சுளிக்கும் வகையில் அரைகுறை ஆடையுடன் குத்தாட்டம் ஆடப்பட்டது.

திமுக இளைஞர் அணி மாநாடு

திமுக இளைஞர் அணி மாநாடு

மாநாட்டில் தீர்மானங்களை உதயநிதி ஸ்டாலின் வாசித்தார். முதலமைச்சர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அதை மத்திய அரசுக்கு அனுப்பி முயற்சி எடுக்க வேண்டும். ஆனால், மத்திய அரசைக் குற்றம் சொல்லி தாங்கள் தப்பித்துக் கொள்ளத் தீர்மானத்தைப் போட்டுள்ளனர்.மக்களை ஏமாற்றுவதற்குத் தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவர்கள் போட்ட தீர்மானங்களை இதுவரை நிறைவேற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை என மக்கள் கேள்வி கேட்கிறார்கள்.

ஆர்.பி.உதயகுமார்

ஆர்.பி.உதயகுமார்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம், ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று தேர்தல் அறிக்கையில் கூறினார்கள். ஆனால், இப்போது ஒரு கோடி கையெழுத்து தேவை என்று கூறுகிறார்கள். திமுக ஆட்சியின் தோல்வி மறைக்கத் தான் இது போன்ற தீர்மானங்களை நிறைவேற்றுகிறார்கள். இந்த தீர்மானங்களின் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் இனத்திற்கும் எந்த பலனும் ஏற்படப்போவதில்லை. கோடி கோடியாகப் பணத்தைக் கொட்டி, அதிகாரத்தைப் பயன்படுத்தி, இளவரசருக்கு முடி சுட்டும் விழா அரைகுறை விழாவாகத் தான் இருந்தது.

இந்த மாநாட்டில் தொண்டர்கள் மகிழ்ச்சியுடன், எழுச்சியுடன் இருப்பார்கள் என்று நினைத்ததில் தோல்வி அடைந்து விட்டனர். உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டுத் தலைவராக உருவாக நினைத்ததில் தோல்வி அடைந்து விட்டனர். திமுக எழுச்சி மாநாடு தற்போது வீழ்ச்சி மாநாடாக மாறிவிட்டது ஏனென்றால், அங்கு காலி சேர்கள் தான் காட்சிப் பொருளாக இருந்தது. திமுக ஆட்சியில் தான் தமிழக உரிமைகள் காவு கொடுக்கப்பட்டது. கச்சத்தீவு காவு கொடுக்கப்பட்டது, காவேரி காவு கொடுக்கப்பட்டது, கேரளா முல்லைப் பெரியாரில் அணைகட்ட முயன்றபோது வாய் மூடி மௌனியாக இருந்தது தான் திமுக.

ஆர்.பி.உதயகுமார்

ஆர்.பி.உதயகுமார்

முல்லைப் பெரியாரில் 142 அடியாக தண்ணீரை தேக்கலாம் என்ற உரிமையைப் பெற்றுத் தந்தது அம்மாவின் அரசு. அதேபோல் காவிரி பிரச்சினைக்கு 50 ஆண்டு காலத்திற்குப் பிறகு தீர்வை பெற்றுத் தந்தவர் எடப்பாடியார். அதேபோல் கல்வியில் மத்திய அரசா, மாநில அரசா என்ற எந்த பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற விவாதத்தில் இரண்டும் சேர்ந்து கொள்ளலாம் என்று திமுக ஆட்சியில்தான் கூறப்பட்டது. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் போகாத ஊருக்கு இன்னமும் திமுக வழி சொல்வது போல மாநாட்டில் தீர்மானம் உள்ளது. இது முட்டாள்தனமான நிலைப்பாடு.

எடப்பாடி பழனிசாமி, ஆர்.பி.உதயகுமார்

எடப்பாடி பழனிசாமி, ஆர்.பி.உதயகுமார்

இன்றைக்கு இந்த ஆட்சியில் கடுமையான விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது, சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது, மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு,பத்திர பதிவுத்துறை கட்டணம் உயர்வு உள்ளது. மேலும் தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்து தமிழகம் வீழ்ந்து தலைகுனிந்து வருகிறது. தமிழகத்தை மீண்டும் தலைநிமிரச் செய்ய எடப்பாடியாரால் தான் முடியும். மீண்டும் அவர் தலைமையில் பொற்கால ஆட்சி அமையும். மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சராக வருவார்” எனக் கூறினார்.

Previous Post

நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குழு உட்பட பல்வேறு குழுக்களை அமைத்தார் EPS.

Next Post

இந்தியில் விமர்சித்த பாஜக… ஒரே ஒரு புகைப்படம் போட்டு கலாய்த்த உதயநிதி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இந்தியில் விமர்சித்த பாஜக… ஒரே ஒரு புகைப்படம் போட்டு கலாய்த்த உதயநிதி!

இந்தியில் விமர்சித்த பாஜக... ஒரே ஒரு புகைப்படம் போட்டு கலாய்த்த உதயநிதி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In