இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்த சீன உளவுக் கப்பலான Xiang Yang Hong-3, மாலத்தீவு நாட்டை நோக்கி நகர்ந்து வருவது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
முன்னதாக, இலங்கை கடற்பகுதியில் சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் நிலை நிறுத்தப்படுவதற்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்தது.
இதனால், சீனக் கப்பல்கள் இலங்கை பொருளாதார மண்டலத்திற்குள் நுழைய ஒரு வருட காலம் தடை செய்வதாக இலங்கை அரசு அறிவித்திருந்தது. இந்த சூழலில், மாலத்தீவை நோக்கி சீனக் கப்பல் நகர்ந்து வருவது இந்தியாவிற்கு பின்னடைவாகக் கருதப்படுகிதறது. இந்தியப்பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தால் தெற்கு ஆசிய நாடுகள் பதற்றத்தில் உள்ளன. இதனால் ஸ்ரீலங்கா , மாலத்தீவுகள், இந்தியா, பங்களாதேஷ், பர்மா போன்ற நாடுகள் குழப்பமடைந்த்துள்ளன.
ஜனவரி 5, 2024 முதல் மே இறுதி வரை தென் இந்தியப் பெருங்கடலில் “ஆழ்ந்த நீர் ஆய்வு” நடத்த திட்டமிடப்பட்ட சீன அறிவியல் ஆய்வுக் கப்பலான Xiang Yang Hong 3, இலங்கை அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்டது. 4,600 டன் எடையுள்ள ஜியாமென் சார்ந்த கப்பலை மாலே கடற்கரையில் (மாலத்தீவின் தலைநகரம்) ஆய்வு நடத்த அனுமதிக்குமாறு மாலத்தீவில் உள்ள பெய்ஜிங் சார்பு முகமது முய்ஸு ஆட்சியையும் சீனா கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



