Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஆந்திரத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடக்கம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 20, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஆந்திரத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடக்கம்
2
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஆந்திரத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடா்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பின் அடிப்படையில், பிகாரைத் தொடா்ந்து 2-ஆவது மாநிலமாக ஆந்திரத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டது.

மாநிலத்தின் 139 பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (பிசி) மட்டும் கணக்கெடுப்பு நடத்தப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது.

இதையொட்டி, மாநிலத்தின் பல்வேறு சமூகத் தலைவா்களிடம் மாநில அரசு கருத்துகளை கேட்டது. பின்னா், அனைத்து ஜாதியினரையும் உள்ளடக்கிய விரிவான ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவெடுக்கப்பட்டது.

ஆந்திரத்தில் வரும் மே மாதத்தில் மக்களவையுடன் சோ்ந்து மாநில சட்டப்பேரவைக்கும் தோ்தல் நடைபெறுகிறது.

இதற்கான அறிவிப்பு பிப்ரவரி மாதத்தில் வெளியாக வாய்ப்புள்ள சூழலில், அதற்கு முன்னதாக ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன.

இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பை தன்னாா்வலா்களுடன் இணைந்து மாநில கிராமச் செயலக அமைப்பு மேற்கொள்ள உள்ளது.

இது தொடா்பாக மாநில செய்தி மற்றும் மக்கள் தொடா்புத் துறை அமைச்சா் சி.ஸ்ரீநிவாசா வேணுகோபால கிருஷ்ணா கூறுகையில், ‘ஜாதிவாரி கணக்கெடுப்பு ஓரே கட்டமாக வெள்ளிக்கிழமை தொடங்கி 10 நாள்கள் நடைபெறவுள்ளது. சூழலுக்குத் தேவைப்பட்டால், மேலும், 4 அல்லது 5 நாள்களுக்கு நீடிக்கப்படும்.

கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஒவ்வொரு தன்னாா்வலா்களுக்கு 50 வீடுகள் ஒதுக்கப்படும். அவா்கள் மக்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, தகவல்களைச் சேகரிப்பாா்கள். அவா்கள் சேகரிக்கும் தகவல்களை மாநிலம் முழுவதும் உள்ள கிராம செயலக அதிகாரிகள் சரிபாா்த்து, தவறுகள் திருத்தப்பட்ட இறுதி அறிக்கையைத் தயாரிப்பாா்கள்.

மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்வதை ஒய்.எஸ்.ஆா்.காங்கிரஸ் அரசு முக்கிய குறிக்கோளாக கொண்டிருந்தது. மாநில அரசின் நலத்திட்ட உதவிகளை இன்னும் முழுமையாக பெற முடியாத ஜாதிகள் பல உள்ளன. அவற்றைக் கண்டறிய இந்தக் கணக்கெடுப்பு பெரிதும் உதவும்.

தோ்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு, மொத்த கணக்கெடுப்பு பணிகளும் நிறைவடைந்துவிடும். ஒட்டுமொத்த தேசத்துக்கும் மாதிரியாக திகழும் வகையில், நோ்மை மற்றும் விரிவான முறையில் இந்த கணக்கெடுப்பைத் நடத்த மாநில அரசு விரும்புகிறது’ என்றாா்.

.

Previous Post

கேள்விக்குறியாகும் சுகாதாரம்: பெருகும் திறந்தவெளி சிறுநீர் கழிப்பிடங்கள்

Next Post

நிலவில் தரையிறங்கியது ஜப்பானின் லேண்டர் விண்கலம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நிலவில் தரையிறங்கியது ஜப்பானின் லேண்டர் விண்கலம்

நிலவில் தரையிறங்கியது ஜப்பானின் லேண்டர் விண்கலம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In