திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சரக்கத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் விசாரணை கைதிகளின் பற்கள் பிரிந்த பட்ட விவகாரம் உலகத்தையே உலுக்கிய நிலையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பல மாதங்களாக நடந்து வரும் இந்த வழக்கின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு டிஜிபி விளக்கம் அளிக்குமாறு நான்கு முறை தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸ் இருக்கு தமிழ்நாடு காவல்துறை உரிய விளக்கம் அளிக்காததால் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1993 ன் பிரிவு 13 இன் படடி பிப்ரவரி 23ஆம் தேதிக்கு முன்பு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
தவறும் பட்சத்தில் மார்ச் 1ம் தேதிதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் முன்பு தேவையான அறிக்கையுடன் தமிழ்நாடு டிஜிபி ஆஜராக வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.



இந்த பல் புடுங்கி பல்வீர்சிங்கை காப்பாற்ற நம் மாநில அரசு கடுமையாக முயற்சி செய்து வருகிறது இது ஒரு தவறான முன் உதாரணம் ஆகும் இருப்பினும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் நடவடிக்கை ஆறுதலாக அமைந்துள்ளது இந்த மனித உரிமைகள் ஆணையம் சிறப்பான முறையில் நடவடிக்கை எடுத்து இந்த பல்வீர் சிங்குக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் அரசாங்கம் பல்வீர் சிங்கையை காப்பாற்ற முயற்சி செய்வது மிகவும் வருத்தமான செய்தி