Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மோடி மட்டுமல்ல; யாரையுமே காமராஜருடன் ஒப்பிடக்கூடாது..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 12, 2024
in Default
0
மோடி மட்டுமல்ல; யாரையுமே காமராஜருடன் ஒப்பிடக்கூடாது..!
9
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பிரதமர் மோடியை காமராஜருடன் ஒப்பிட்டு பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கே.பி.முனுசாமி

கே.பி.முனுசாமி

என் மண், என் மக்கள் என்ற தனது யாத்திரையின்போது கிருஷ்ணகிரியில் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டுப் பேசியிருந்தார்.   “சமூக நீதிக்கு இந்தியாவில் இரண்டு தலைவர்களைத்தான் உதாரணமாகக் கூற முடியும். கர்மவீரர் காமராஜர் மற்றும் பாரதப்பிரதமர் மோடி ஆகியோர் தான் அந்த இரண்டு பேர். கர்மவீரர் காமராஜரைப் போலவே, நமது பிரதமரின்  அமைச்சரவையில் 80% இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் உள்ளனர். மோடி  மீண்டும் மத்தியில்  ஆட்சிக்கு வந்தால்தான், தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி மலரும்” என்று பேசி இருந்தார்.

மேலும் தமிழக மக்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார். “வரும் பாராளுமன்றத் தேர்தலில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் நேர்மைக்கு, ஆளுமைக்கு, இந்தியாவின் எதிர்காலத்திற்காக தமிழகமும் வாக்களிக்க வேண்டும். பாஜக போட்டியிடும் தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் மோடியே போட்டியிடுகிறார் என்று கருதி, மக்கள் அனைவரும் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். ஊழலற்ற, நேர்மையான, மக்கள் நலன் சார்ந்த, புதிய அரசியல் சகாப்தத்தை தமிழகத்தில் எழுதுவதற்கான நேரம் வந்து விட்டது”  என்று அண்ணாமலை பேசியிருந்தார்.

இந்நிலையில் காமராஜருடன் பிரதமர் நரேந்திர மோடியை ஒப்பிட்டுப்பேசிய, பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.  “பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்காமல் வஞ்சிக்கிறது. மக்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் காமராஜர். அவருடன் தற்கால தலைவர்களை ஒப்பிட்டால் சரியாக இருக்காது. தற்போது உள்ள எந்த தலைவர்களையும், காமராஜருடன் ஒப்பீடு செய்யக்கூடாது” என்று கூறியுள்ளார்.

அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசிய கருத்துக்கள் தான் அதிமுக – பாஜக கூட்டணியை முடிவுக்கு கொண்டு வந்தது.  இந்த நிலையில் தற்போது காமராஜர் பற்றி பேசியதற்கும் அதிமுகவினர் கண்டனம் தெரிவிப்பது இரு கட்சிகளுக்குமான உறவு இன்னும் சீரடையவில்லை என்பதை வெளிக்காட்டுவதாக உள்ளது.

Previous Post

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க மறுப்பு.

Next Post

ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு கலைஞர் பெயர் சூட்டக்கூடாது – பாஜக போராட்டம்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு கலைஞர் பெயர் சூட்டக்கூடாது – பாஜக போராட்டம்.

ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு கலைஞர் பெயர் சூட்டக்கூடாது - பாஜக போராட்டம்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In