கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் தமிழகத்தில் நடந்த கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக தமிழக அரசை கண்டித்தும், அதற்க்கு பொறுப்பேற்ற்று முக ஸ்டாலின் பதவி விலக கோரியும், அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நேரில் ஆஜராக வேண்டும் என மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாளை காலை 10:30 மணியளவில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது

