Wednesday, October 28, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ரயில் சேவைக்குத் தடை போட்ட பிரான்ஸ் | Password Sharing-க்கு செக் வைத்த NETFLIX – உலகச் செய்திகள்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 24, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
ரயில் சேவைக்குத் தடை போட்ட பிரான்ஸ் | Password Sharing-க்கு செக் வைத்த NETFLIX - உலகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ரயிலின் மூலம் சென்றடையக் கூடிய குறுகிய வழித்தடங்களில், உள்நாட்டு விமானச் சேவையை பிரான்ஸ் தடைசெய்திருக்கிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த முடிவை அந்த நாடு எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பல்கேரியா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ஜியோர்ஜி கோஸ்போடிநோவ் (Georgi Gospodinov) சர்வதேச புக்கர் பரிசை தனது டைம் ஷெல்டர் என்ற புத்தகத்துக்காக வென்றிருக்கிறார்.

பால்டிக் கடல் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இரண்டு அமெரிக்க விமானங்கள், ரஷ்ய எல்லை பாதுகாப்புப்படையால் இடைமறிக்கப்பட்டன. இதை பென்டகன் உறுதிசெய்திருக்கிறது.

அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே ட்ரக் ஒன்று பேரியர்கள்மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. அதிபர் ஜோ பைடனைக் கொலைசெய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டிருக்கலாம் என்பதன் அடிப்படையில் அந்த ட்ரக்கை ஓட்டிவந்த, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

இந்தோனேசியாவின் மெராப்பி எரிமலை, சிறிய நில அதிர்வுடன் வெடிக்கத் தொடங்கியிருக்கிறது. இதிலிருந்து தீப்பிழம்புகள் வெளியேறி வருவதால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். இந்த எரிமலையில் 2010-ல் ஏற்பட்ட வெடிப்பின்போது, 300 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவின் சிட்னியிலுள்ள பரமட்டா ( Parramatta) பகுதியின் மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமீர் பாண்டே தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். ஆஸ்திரேலியாவின் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் மேயர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் சமீர்.

பயனாளர்கள் தங்கள் கணக்குகளை மற்றவர்களுக்குப் பகிர்வதால், புதிய தொடர்களில் முதலீடு செய்வது கடினமாகியிருப்பதாக, பிரபல ஓ.டி.டி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் தெரிவித்திருக்கிறது.

இலங்கை தனது கடன் மறுசீரமைப்பு நடைமுறையைச் செப்டம்பர் மாதத்துக்குள் செயல்படுத்த வேண்டும் என்று, சர்வதேச நாணய நிதியம் (IMF) வலியுறுத்தியிருக்கிறது.

Indoor 200 மீட்டர் தடகள விளையாட்டுகளைக் குறிப்பிடும்போது, இனி `indoors’ என்ற சொல்லுக்குப் பதிலாக, `Short Track’ என்ற சொல்லைப் பயன்படுத்த உலக தடகள கவுன்சில் முடிவுசெய்திருக்கிறது.

தன்பாலின ஈர்ப்பாளர்களைக் கொண்டாடும் வகையில் சுவிஸ் நிறுவனம் தயாரித்த 164 வாட்ச்சுகளை, மலேசிய அதிகாரிகள் பரிமுதல் செய்தனர். அந்நாட்டில் தன்பாலின உறவு சட்டவிரோதம் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் கடைசி பேரரசர் அணிந்திருந்த கைகடிகாரம் ஏலத்துக்கு வந்தது… அந்த கடிகாரம் 6.2மில்லியன் டாலருக்கு ஏலம் சென்றிருக்கிறது.

.

Tags: NETFLIXPasswordSharingககஉலகசசகசயதகளசவககததடபடடபரனஸரயலவதத
Previous Post

பசுமை பொருளாதாரமா? டிஜிட்டல் பொருளாதாரமா? சிங்கப்பூர் அமைச்சர் உடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

Next Post

நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா தொடக்கம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ராஜபாளையம் | நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா தொடக்கம்

நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா தொடக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In