Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தமிழ்நாடு அரசிற்கு கடும் நெருக்கடி – அம்மோனியா வாயு கசிவால் அவதிப்படும் 32 கிராம மக்களுக்கு தீர்வு என்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 6, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தமிழ்நாடு அரசிற்கு கடும் நெருக்கடி – அம்மோனியா வாயு கசிவால் அவதிப்படும் 32 கிராம மக்களுக்கு தீர்வு என்ன?
84
SHARES
136
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை- எண்ணூர் பகுதியில் அமைந்துள்ள கோரமண்டல் பெர்டிலைசர் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதிலிருந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு அமோனியா வாயு கசிந்தது. அதனால் பெரிய குப்பம், சின்ன குப்பம், எர்ணாவூர் குப்பம், இந்திரா காந்தி குப்பம், காசி கோவில் குப்பம் போன்ற மீனவர் கிராமங்களில் பொது மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் மிக மோசமான நிலை அனுமதிக்கப்பட்டனர்.

இதனால் அன்றிலிருந்து பல அரசியல் பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் என அனைவரும் இந்த பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களுக்காக குரல் கொடுத்த வண்ணம் உள்ளனர். ஆனால் அந்த நிர்வாகமோ தமிழக அரசோ எவ்வித நடவடிக்கும் இன்றி தற்காலிகமாக ஒரு வாரம் மட்டும் இந்த நிறுவனத்தை மூட அரசு உத்தரவிட்டது.

ஆனால் பாதிக்கப்பட்ட இந்த பகுதி மீனவ கிராமங்களைச் சேர்ந்த அனைவரும் ஒருமித்த கருத்தில் உள்ளனர், அது என்னவென்றால் போபாலில் விஷவாயு தாக்கியது போல நிகழ்வாகும் இது என்பதில் உறுதியாக உள்ளனர். இது சிறிய விஷயம் ஆகையால் பார்த்துக் கொள்ளலாம் என்று நிறுவனமும் தமிழக அரசும் நினைத்துக் கொண்டிருக்கின்றன.


மக்களின் வாழ்வாதார பிரச்சனை, உடல் ரீதியான பிரச்சனைகளுக்கு, நிரந்தர தீர்வு காணாமல் அரசு மெத்தனப்போக்காக செயல்படுகிறது. ஆனால் போபால் விஷவாயு தாக்கியது போல பெரிய நிகழ்வு ஏற்பட்டால் இந்த நிறுவனமும் தமிழக அரசும் என்ன செய்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆகையால் சுமார் 11 நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர், அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

இதற்கு நிரந்தர தீர்வாக ஆலையை மூட வேண்டும் என்று பொதுமக்களும் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களும் அரசியல் ஆர்வலர்களும் சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். தமிழக அரசு விரைந்து இந்த தொழிற்சாலையை மூட நடவடிக்கை எடுக்குமா? மீனவர்கள்தானே இவர்கள் என்ன செய்வார்கள் என நினைத்து அலட்சியப்படுத்தி கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது தமிழக அரசு.

ஆகையால் தான் இன்று தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், எண்ணூர் குப்பம், முகத்துவாரகுப்பம், பெரியகுப்பம், சின்னகுப்பம் போன்ற 32 மீனவ கிராமங்களும் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதி மக்கள் சுகாதாரமாக, ஆரோக்யமாக வாழ வழிவகை செய்ய வேண்டியது அரசின் முக்கிய கடமையாகும்.

Previous Post

சோதனை நீரை சுவைத்த அமைச்சர் நேரு..

Next Post

உஷார்… அல்வா, சிப்ஸ்களில் அதிகளவில் ரசாயனங்கள் கலப்பு – கேன்சர் வரை கொண்டுசெல்லும் அபாயம்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
உஷார்… அல்வா, சிப்ஸ்களில் அதிகளவில் ரசாயனங்கள் கலப்பு – கேன்சர் வரை கொண்டுசெல்லும் அபாயம்.

உஷார்... அல்வா, சிப்ஸ்களில் அதிகளவில் ரசாயனங்கள் கலப்பு - கேன்சர் வரை கொண்டுசெல்லும் அபாயம்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In