Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சிறைத்துறை டி.ஐ.ஜி பழனிக்கு மக்கள் ஆணையம் இதழ் சார்பில் “மிஸ்டர் ஆணையர்-2023” விருது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 6, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
சிறைத்துறை டி.ஐ.ஜி பழனிக்கு மக்கள் ஆணையம் இதழ் சார்பில் “மிஸ்டர் ஆணையர்-2023” விருது
48
SHARES
77
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மதுரையில் மக்கள் ஆணையம் இதழின் சார்பில் “மிஸ்டர் ஆணையர்-2023” விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் அம்மு முத்தையா, மொபின் சுல்தானா, ரம்யா, ஜெயலட்சுமி திருப்பதி, சரண்யா தேவி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

மதுரையில் நடைபெற்ற விழாவில் மக்கள் ஆணையம் சார்பில் சிறைத்துறை டி.ஐ.ஜி பழனிக்கு “மிஸ்டர் ஆணையர்-2023” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.


மதுரை பைபாஸ் சாலை கே.பி.எஸ்.மஹாலில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவிற்கு
மக்கள் ஆணையம் இதழின் ஆசிரியர் என்.கே.முத்தையா தலைமை தாங்கினார். கே பி நவநீதகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஜூபிடர் ரவி முதன்மை ஆசிரியர், திருப்பதி இணை ஆசிரியர், மாவட்ட செய்தியாளர் மைலேரி, தலைமை செய்தியாளர் பெரியதுரை ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர். இவ்விழாவிற்கான சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறைத்துறை துணைத் தலைவர் (டி.ஐ.ஜி) டி.பழனிக்கு, மிஸ்டர் ஆணையர் விருதை வழங்கி கௌரவித்தார்.


இவ்விழாவில் மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் மாவட்ட செயலாளர் அழகேசன், சிவகங்கை அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ராமு இளங்கோவன், சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் மோகன்ராஜ், தமுமுக மாநில கொள்கை பரப்புச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், மூத்த பத்திரிகையாளர் மோகன்ராம், பொறுப்பாசிரியர் மோகனவேலன், மற்றும் நிர்வாக ஆசிரியர் நந்தகுமார் முதன்மை பொறுப்பாசிரியர் பாண்டித்துரை ஆகியோ நன்றியுரை ஆற்றினர்.
மேலும் நிகழ்ச்சியில் பார்வையற்றோர்களுக்கு மக்கள் ஆணையம் சார்பாக நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.


விருது பெற்ற சிறைத்துறை டி.ஐ.ஜி பழனி, சிறைத் துறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி சிறைவாசிகளின் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்தவர்.‌ கடலூர் மத்திய சிறையில் எஸ்.பி.யாக பணிபுரிந்த போது நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துடன் இணைந்து சிறைவாசிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியளித்து அவர்களை நல்வழிப் படுத்தினார்.

மதுரை சிறைச்சந்தையில் சிறைவாசிகளால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை பொது மக்களின் பார்வைக்கு கொண்டு வந்து சிறைவாசிகளின் திறமையை வெளி உலகத்துக்கு அடையாளப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.‌ இந்நிகழ்ச்சியில் இணையாசிரியர்கள் ஜெகதீஸ்வரி, முத்துராஜ், மாவட்ட செய்தியாளர் ரங்கநாதன், உதவியாசிரியர் சூரிய மோகன், புகைப்பட கலைஞர் செந்தில்குமார் விழாவுக்கு சிறப்பு சேர்த்தார்கள்.

சமூக சேவை விருது பெற்றவர்கள் ரயில்வே ஓய்வு பெற்று அதிகாரி சுந்தரராஜன், 10 வது வார்டு கவுன்சிலர் செல்வி, அருப்புக்கோட்டை மக்கள் நீதி மய்யம் மாவட்ட பொறுப்பாளர் செல்வகுமார், சோளங்குருணி ரவிச்சந்திரன், இயற்கை விவசாயி கமுதி ராமர், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஐய்யப்பராஜா, ராமராஜ், திமுக இளைஞர் அணி துணை செயலாளர் ஜி.பி.ராஜா, திமுக மாவட்ட பிரதிநிதி அழகு பாண்டி, பாரதி. மாவட்ட செய்தியாளர்கள் தேனி சரவணக்குமார், மேலும் சிறந்த பத்திரிகையாளராக விருது பெற்றவர்கள் விருதுநகர் பார்த்தசாரதி, சிவகங்கை இசக்கி ராஜா, சேலம் கலியன், வேலூர் மூத்த பத்திரிகையாளர் விநாயகம் ஆகியோர்களுக்கு நினைவு பரிசு மற்றும் விருதுகள் வழங்கப்பட்டது. பத்திரிகையாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.

Previous Post

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் : பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு.

Next Post

20 ஆயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடக்கம்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
20 ஆயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடக்கம்.

20 ஆயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடக்கம்.

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    சிறைத்துறை DIG பழனி அவர்களுக்கு மிஸ்டர் ஆணையர் விருது மக்கள் ஆணையம் வழங்கியதை வரவேற்கிறேன்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In