அகமதுநகர்: தேசியவாத காங்கிரஸ் – சரத்பவார் பிரிவு தலைவர் ஜிதேந்திர அவாத், ராமர் குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ராமர் ‘பகுஜன் ‘ (பெரும்பான்மை மக்கள்) ஆவார் என்றும் பொதுவான நம்பிக்கைக்கு மாறாக அசைவ உணவு உண்பவர் என்றும் அவாத் புதன்கிழமை கூறினார். ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தி பிரதிஷ்டை விழா நாளில் ஒரு நாள் மது மற்றும் இறைச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ ராம் கதம் மகாராஷ்டிரா அரசை வலியுறுத்திய பிறகு இது வந்துள்ளது.
‘ராமர் சைவ உணவு உண்பவர் அல்ல, அசைவ உணவு உண்பவர்’
“ராமர் எங்களுடையவர். ராமர் பகுஜன்களுக்கு சொந்தமானவர். ராமர் வேட்டையாடி உண்பவர். ராமர் எங்களுடையவர், நாங்கள் பகுஜனங்களைச் சேர்ந்தவர்கள். ராமரின் கொள்கைகளைப் பின்பற்றுகிறோம், நீங்கள் அனைவரும் சைவ உணவு உண்பதற்குச் செல்லும்போது, இன்று நாங்கள் ஆட்டிறைச்சி சாப்பிடுகிறோம். இதுதான் ராமரின் இலட்சியம், ராமர் சைவ உணவு உண்பவர் அல்ல, அவர் அசைவ உணவு உண்பவர்,” என மகாராஷ்டிராவின் ஷீரடியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவாத் கூறினார்.
“14 ஆண்டுகளாக காட்டில் வசித்த ஒருவர் சைவ உணவை எங்கே கண்டுபிடிப்பார்? இது சரியா இல்லையா (பொதுமக்களிடம் கேள்வி)? நான் உண்மையைச் சொல்லும்போது எனக்கு பதில் சொல்லுங்கள். ” என்றார்.
சில மணிநேரங்களுக்கு பிறகு ராமர் அசைவம் உண்பவர் என்னும் என் கருத்திற்கு நான் வருத்தம் தெரிவிக்கிறேன் என்று தன் கருத்துக்கு ஜிதேந்திர அவாத் மன்னிப்பு கேட்டார்
பாஜக-வின் நிலை
ராமர் “அசைவ உணவு உண்பவர்” என்று கூறியதற்காக என்சிபி – சரத் பவார் பிரிவு தலைவர் ஜிதேந்திர அவாத் மீது பாஜக தலைவர் ராம் கதம் போலீசில் புகார் அளித்துள்ளார். “ராம பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதே அவர்களின் மனநிலை. வாக்கு சேகரிக்க இந்து மதத்தை கேலி செய்ய முடியாது என்று ராம் கதம் கூறினார்.

