Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் பேருந்தை சிறைப்பிடித்து பொதுமக்கள் திடீர் போராட்டம்.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 3, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் பேருந்தை சிறைப்பிடித்து பொதுமக்கள் திடீர் போராட்டம்.
32
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறும் பேருந்துகளை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

This morning, suddenly, people jumped into protest at kilambakkam bus stand

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை கடந்த டிசம்பர் 30ஆம் தேதி தமிழக முதல்வர் திறந்து வைத்தார். முதல் கட்டமாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, திருச்சி, கோவை, ஈரோடு, சேலம், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 

தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழக பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ளே வந்து பயணிகளை ஏற்றி செல்கின்றனர். மேலும் இங்கிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு மாநகரப் பேருந்துகள் மூலமாக இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்று வருகின்றன. 

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் போராட்டம்...!

இந்த நிலையில், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து வெளியேறும் பேருந்துகள் ஜிஎஸ்டி சாலையின் சர்வீஸ் சாலையில் இயக்கப்பட்டு தேசிய நெடுஞ்சாலை வழியாக பல்வேறு ஊர்களுக்கு செல்கின்றன. பேருந்துகள் இயக்கப்படும் சர்வீஸ் சாலையில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது.

இந்த பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளிக்கு சென்றுவர இந்த சர்வீஸ் சாலையையே பயன்படுத்தி வந்தனர். இதனிடையே பேருந்துகள் சர்வீஸ் சாலையில் இயக்கப்பட்டு வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறி, அப்பகுதி பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பேருந்துகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தென் மாவட்டங்களில் இருந்து வந்த பொதுமக்கள் சென்னைக்கு செல்ல முடியாமல் தவித்தனர். 

சம்பவ இடத்திற்கு சென்ற கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார், போராட்டத்தில் ஈடுபடும் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். சர்வீஸ் சாலையில் பேருந்துகளை இயக்க கூடாது, இல்லை என்றால் சுரங்கபாதை அல்லது மேம்பாலம் கட்டி தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Previous Post

அரசே தொழிற்சாலைகளை அமைப்பது சாத்தியமில்லை என்பதால்,  தனியார் தொழில் நிறுவனங்களின் முதலீடு அவசியம் : அமைச்சர் எ.வ. வேலு

Next Post

ஐய்யய்யோ செந்தில் பாலாஜி வழக்கில் இவ்வளவு பேர் குற்றவாளிகளா..?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஐய்யய்யோ செந்தில் பாலாஜி வழக்கில் இவ்வளவு பேர் குற்றவாளிகளா..?

ஐய்யய்யோ செந்தில் பாலாஜி வழக்கில் இவ்வளவு பேர் குற்றவாளிகளா..?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In