அதிமுகவுக்காக உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்ற அதிமுக ஐடி பிரிவு ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தகவல் தொழில்நுட்பப் பிரிவு என்னுடைய நேரடி கட்டிப்பாட்டில் உள்ளது. அதிமுக ஐடி பிரிவினர் எதற்காகவும் யாருக்காகவும் அஞ்ச வேண்டாம். பிற கட்சிகளின் ஐடி விங் போல வெறுப்பை உண்டாக்க வேண்டாம். சமூக வலைத்தளங்கள் வாயிலாக செயல்படும் அதிமுகவினர் யாரையும் மரியாதை குறைவாகவோ நாகரிகமற்ற முறையிலோ விமர்சிக்க கூடாது. அதிமுகவின் சாதனைகளையும், திமுக அரசு செய்யும் தவறுகளையும் மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.
மாவட்ட செயலாளர்கள் பிற நிர்வாகிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். சமூக வலைதள நிர்வாகிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க 7 க்ழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிமுகவுக்காக உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்” என்றார்

