
இந்திய மல்யுத்த சம்மேளன நிா்வாகத்தை கையாள 3 பேர் கொண்ட இடைக்கால குழுவை இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்துள்ளது.
சஞ்சய் சிங் தலைமையிலான இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு எதிர்ப்புகள் எழுந்ததைத் தொடர்ந்து, புதிய நிர்வாகிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
மேலும், மல்யுத்த சம்மேளன நிா்வாகத்தை கையாள இடைக்கால குழுவை அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்காக 3 பேர் கொண்ட குழுவை இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்துள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவரை பதவி விலகக் கோரி இந்திய மல்யுத்த வீரர்-வீராங்கனைகளான, சாக்ஷி மாலிக், வினேஷ் போகட், பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து தலைவர் பதவியிலிருந்து அவர் விலகினார். அவருக்கு அடுத்தபடியாக சஞ்சய் சிங் என்பவர் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரானார். அவர் பிரிஜ் பூஷண் சிங்கின் ஆதரவாளர் என்பதால், சஞ்சய் சிங்கிற்கு எதிர்ப்புகள் எழுந்தன.
சாக்ஷி மாலிக் மல்யுத்த விளையாட்டில் இருந்தே ஓய்வு பெறுவதாக அறிவித்தாா். பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோர் பதக்கங்களைத் திரும்பத் தருவதாக அறிவித்தனர்.
உ.பி. மாநிலம் கோண்டாவில் யு-15, யு-20 தேசிய மல்யுத்தப் போட்டிகள் நடத்ததப்படும் என அறிவித்தது. இது சா்ச்சையை ஏற்படுத்தியது. போட்டிகளை அறிவிக்கும் போது உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை. மேலும் மல்யுத்த வீரா்களுக்கு போதிய அவகாசமும் தரவில்லை எனக் கூறி புதிய நிா்வாகிகளின் குழுவுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் தடை விதித்தது.

