Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 26, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?
38
SHARES
61
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று (டிசம்பர் 26) நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

1. அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்று கட்சியை சிறப்பாக வழிநடத்தி வரும் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுக்கள்.

2. மதுரையில் நடைபெற்ற பொன்விழா எழுச்சி மாநாடு வெற்றி பெற்றதற்கு நன்றியும், பாராட்டும்.

3. மிக்ஜாம் புயலை முன்பே எதிர்கொள்ள திட்டமிடாமல் மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்யாமல் இருக்கும் திமுக அரசுக்கு கண்டனங்கள்.

4. (1) சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பேசும்போது ஒளிபரப்பு செய்யாமல் இருட்டடிப்பு செய்வதற்கு கண்டனம். (2) எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை சம்பந்தமாக சட்டமன்ற மரபுகளை கடைபிடிக்காத பேரவை தலைவருக்கு கண்டனம்.

5. கட்சத்தீவை மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள திமுக அரசுக்கு வலியுறுத்தல்.

6. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசுக்கு கண்டனம்.

7. சட்டம் ஒழுங்கு சீரழிவிற்கும் – திமுகவின் மக்கள் விரோத போக்கிற்கும் கண்டனம்.

8. ஊழல் ஆட்சி நடத்தும் திமுக அரசுக்கு கண்டனம்.

9. 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய திமுக அரசுக்கு வலியுறுத்தல்.

10. நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற பாதுகாப்பு அத்துமீறல் சம்பவம் கண்டிக்கத்தக்கது. ஜனநாயக அமைப்புகளின் பாதுகாப்பை வலுப்படுத்த மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.

11. ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.

12. வடகிழக்கு பருவமழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்காத திமுக அரசுக்கு கண்டனம்.

13. தமிழ்நாட்டில் நெசவுத்தொழிலை பாதுகாக்க தவறிய திமுக அரசுக்கு கண்டனம்.

14. பட்டியலின மக்களின் நலனில் அக்கறை கொள்ளாமல் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை பறிக்கும் வகையில் செயல்படும் திமுக அரசுக்கு கண்டனம்.

15. அவசரகதியில் பொதுப்பாடத்திட்டத்தை அமல்படுத்த துடிக்கும் திமுக அரசுக்கு கண்டனம்.

16. (1) தமிழ் உள்ளிட்ட 22 மாநில மொழிகள் அனைத்தையும் அலுவல் மொழிகளாக அறிவிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்தல்.( 2) சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை கொண்டு வர வலியுறுத்தல்.

17. சமூக நீதிக்கு எதிராக செயல்படும் திமுக அரசுக்கு கண்டனம்.

18. காவிரி நதிநீர் பிரச்சனையில் திமுகவின் சந்தர்ப்பவாத துரோகத்திற்கு கண்டனம்.

19. நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி அளித்த திமுக அரசுக்கு கண்டனம்.( 2 )தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசுக்கு கண்டனம்.

20. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியது, சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணத்தை உயர்த்திய திமுக அரசுக்கு கண்டனம்.

21. முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசுக்கு கண்டனம்.

22. குளறுபடி இல்லாத வாக்காளர் பட்டியல் அமைந்திட இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தல்.

23. நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற அதிமுக தொண்டர்கள் கட்சி பணியாற்றிட வேண்டும்.

Previous Post

எடப்பாடிக்கு மனசாட்சி இருக்கிறதா?: ஓபிஎஸ் கேள்வி!

Next Post

இனி ஜெட் வேகத்தில் அதிமுக செயல்படும்- எடப்பாடியார் சூளுரை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இனி ஜெட் வேகத்தில் அதிமுக செயல்படும்- எடப்பாடியார் சூளுரை!

இனி ஜெட் வேகத்தில் அதிமுக செயல்படும்- எடப்பாடியார் சூளுரை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In