Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பார்லிமென்ட் செல்வதற்கு ‘பாஸ்’ கொடுத்த பிரதாப் சிம்ஹாவால் மைசூரு தொகுதியில் பா.ஜ.,வுக்கு கடும் நெருக்கடி..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 20, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
பார்லிமென்ட் செல்வதற்கு ‘பாஸ்’ கொடுத்த பிரதாப் சிம்ஹாவால் மைசூரு தொகுதியில் பா.ஜ.,வுக்கு கடும் நெருக்கடி..!
5
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மைசூரு பா.ஜ., – எம்.பி.,யான பிரதாப் சிம்ஹா, 2008ல் பிரபல கன்னட நாளிதழில் நிருபராக பணியாற்றினார். அப்போது, அவர், குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி தொடர்பாக, புத்தகம் எழுதினார். இந்த புத்தகம், பா.ஜ., தலைவர்களின் கவனத்தை ஈர்த்தது.

மோடி அலை

தீவிர ஹிந்துத்வா ஆதரவாளரான பிரதாப் சிம்ஹாவுக்கு, 2014 லோக்சபா தேர்தலில் மைசூரு தொகுதியில் போட்டியிட, பா.ஜ., சீட் வழங்கியது. அப்போது நரேந்திர மோடியின் அலையால், முதல் தேர்தலிலேயே வெற்றி வாகை சூடினார்.

காங்கிரசின் கோட்டையாக இருந்த மைசூரு, பா.ஜ.,வின் கோட்டையானது. இதை தொடர்ந்து 2019ல், அதே தொகுதியில், இரண்டாவது முறையாக வென்றார். இம்முறையும், நரேந்திர மோடி அலை கைகொடுத்து உதவியது.

கடந்தாண்டு மைசூரில் பஸ் நிறுத்தங்களில் குறிப்பிட்ட மதத்தினரை நினைவுபடுத்தும் வகையில், ‘வளைவு’ அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு பா.ஜ., – எம்.எல்.ஏ., ராம்தாஸ் உட்பட பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதுபோன்று பலமுறை தடாலடியாக, பிரதாப் சிம்ஹா பேசி வந்தார். இதனால் மைசூரு மாவட்ட பா.ஜ., – எம்.எல்.ஏ.,க்களுடன் அவருக்கு ஏற்பட்ட உரசல் தொடர்கிறது.

இதேபோன்று கடந்த சட்டசபை தேர்தல் தோல்விக்கு, முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகியோர் மீது காரசாரமாக கருத்து கூறினார். தொடர்ந்து, கட்சிக்குள் பலரிடம் விரோதத்தை ஏற்படுத்தி கொண்டுள்ளார்.

பார்லிமென்ட் சம்பவம்

இந்நிலையில், டிசம்பர் 13ம் தேதி பார்லிமென்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள், கையில் புகை குண்டுகளை வீசினர். இது நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில், மைசூரை சேர்ந்த மனோரஞ்சன் என்பவரும் சிக்கினார். இவர், பார்லிமென்டில் செல்வதற்கு பிரதாப் சிம்ஹாவே ‘பாஸ்’ கொடுத்துள்ளார். இந்த விஷயம், பெரும் சர்ச்சையை கிளப்பியது.

பார்லிமென்டில் நடந்த சம்பவத்துக்கு, முதல் காரணமான பிரதாப் சிம்ஹா பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் போர்க்கொடி துாக்கி உள்ளனர். இது, வெறும் வாயை மெல்வோருக்கு அவல் கிடைத்த கதையாக அமைந்து உள்ளது.

பார்லிமென்ட் சம்பவத்தை மையமாக வைத்து, எதிர்க்கட்சியான காங்கிரஸ், மைசூரு தொகுதியில் பா.ஜ.,வுக்கு கடும் நெருக்கடி கொடுக்க முடிவு செய்துள்ளது.

இத்தொகுதியில், காங்கிரசில் முதல்வர் சித்தராமையாவின் மகனும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான எதீந்திராவை நிறுத்தவும் திட்டமிட்டுள்ளது.

.

Previous Post

வங்க தேசத்தில் ரயிலுக்கு தீ வைப்பு: நான்கு பேர் பலி

Next Post

சுங்க, கலால் வரி மாற்றங்களை உடனடியாக அமல்படுத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சுங்க, கலால் வரி மாற்றங்களை உடனடியாக அமல்படுத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்

சுங்க, கலால் வரி மாற்றங்களை உடனடியாக அமல்படுத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In