Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

வரலாறு காணாத மழை..! டெல்லி விரையும் முதல்வர் ஸ்டாலின்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 18, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
வரலாறு காணாத மழை..! டெல்லி விரையும் முதல்வர் ஸ்டாலின்..
26
SHARES
42
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித்தீர்த்துள்ளதால் தமிழக தென் மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. மழை வெள்ள பாதிப்பு குறித்து பிரதமரிடம் விளக்குவதற்காக முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரலாறு காணாத மழை கொட்டித்தீர்த்துள்ளதால் தமிழக தென் மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன. உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆறுகளில் அபரிமிதமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் டிசம்பர் 3,4ஆம் தேதிகளில் பெய்த மழையால் வெள்ளம் தேங்கியது. பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். வெள்ள நிவாரணப் பணிகளுக்காக உடனடியாக ரூ.5,060 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும் என கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தை, பிரதமர் நரேந்திர மோடியிடம் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வழங்கினார்.

இந்த சூழ்நிலையில் தமிழக தென் மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. சாலைகள், ரயில் தண்டவாளங்கள் சிதைந்து போயுள்ளன. தென் மாவட்டங்கள் பேரழிவை சந்தித்துள்ளன. இதனையடுத்து 9 அமைச்சர்கள், ஏராளமான ஐஏஎஸ் அதிகாரிகள் மீட்பு, நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து முதல்வர் மு.க ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேச உள்ளார். தமிழக வெள்ள பாதிப்புகள் குறித்து நேரில் விளக்கும் முதல்வர், வெள்ள நிவாரணத்திற்கு தேவையான பணத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க உள்ளார். கோவையில் இருந்து டெல்லி செல்லும் முதல்வர் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous Post

நாட்டுக்காக நன்கொடை: பிரசாரத்தைத் தொடங்கியது முக்கிய கட்சி..!

Next Post

யப்பா இவ்வளோ SC/ST அரசுப்பணி காலியிடங்களா..?? – தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையம் (NCSC) கூறியும் நிரப்பாதது ஏன்?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
யப்பா இவ்வளோ SC/ST அரசுப்பணி காலியிடங்களா..?? – தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையம் (NCSC) கூறியும் நிரப்பாதது ஏன்?

யப்பா இவ்வளோ SC/ST அரசுப்பணி காலியிடங்களா..?? - தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையம் (NCSC) கூறியும் நிரப்பாதது ஏன்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In