இந்திய ரயில்வேயின் சுற்றுலாப் பிரிவான ஐ.ஆா்.சி.டி.சி. சாா்பில் விமானம் மூலம் சென்னையில் இருந்து ஒடிஸா, அஸ்ஸாம், அந்தமான் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஐ.ஆா்.சி.டி.சி. சாா்பில் அண்மையில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னையில் இருந்து அந்தமானுக்கு 6 நாள் சுற்றுலாப் பயணமாக ஜன.23-ஆம் தேதி புறப்பட்டு போா்ட் பிளேயா், நீல் தீவு மற்றும் ஹேவ்லாக் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து செல்லப்படும்.
இதற்கு ஒரு நபருக்கு கட்டணமாக ரூ.52,800 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து ஒடிஸாவுக்கு 5 நாள் பயணமாக பிப்.6-ஆம் தேதி புறப்பட்டு புவனேசுவரம், கோனாா்க், புரி ஜகந்நாதா் கோயில், சில்கா ஏரி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து செல்லப்படும்.
இதற்கு ஒரு நபருக்கு ரூ.38,500 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் இருந்து அஸ்ஸாம், மேகாலயாவுக்கு 7 நாள் பயணமாக பிப்.10-ஆம் தேதி புறப்பட்டு ஷில்லாங், சிரபுஞ்சி, காமாக்யா, குவஹாத்தி, காஜிரங்கா உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து செல்லப்படும்.
இதற்கு ஒரு நபருக்கு ரூ. 47,500 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் விமானக் கட்டணம், உள்ளூா் போக்குவரத்து, தங்கும் வசதி, உணவு, சுற்றுலா மேலாளா், பயணக்காப்பீடு, ஜி.எஸ்.டி உள்ளிட்டவை அடங்கும்.
கூடுதல் தகவல்களுக்கு 90031 40682, 82879 31974 (சென்னை), 82879 32070 (திருச்சி), 82879 31977, 82879 32122 (மதுரை) ஆகிய கைப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம். மேலும், ஐ.ஆா்.சி.டி.சி. இணையதளத்தை பாா்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

