Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இந்த சாதிக்கு வீடு கிடையாது! கர்நாடகத்தில் நிகழும் அநீதி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 17, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
இந்த சாதிக்கு வீடு கிடையாது! கர்நாடகத்தில் நிகழும் அநீதி!
32
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram
Screenshot_2023-12-17_124238

கோப்புப்படம்.

கர்நாக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் தூய்மைப் பணியாளர்களாக வேலை செய்யும் கோர்கா பழங்குடியின மக்களுக்கு, வாடகைக்கு வீடு கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வீடு வழங்கிய வீட்டு உரிமையாளர்களும் சாதி தெரிந்தபின் இரண்டு நாள்களுக்குள் வீட்டைக் காலி செய்ய வைத்துள்ள சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

பைந்தூரை சுத்தமாக வைப்பதற்காக உழைக்கும் மக்களுக்கு தங்குமிடம் அளிக்க, அப்பகுதி மக்களே மறுத்துவரும் பெரும் சமூக அநீதி கர்நாடக மாநிலத்தில் நடந்துவருகிறது.

25க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் டிசம்பர் 1-ஆம் நாள் முதல் உடுப்பி சிஎம்சி-யிலிருந்து பைந்தூருக்கு வேலை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் பைந்தூருக்கு இடம் பெயர்ந்த தூய்மைப் பணியாளர்களுக்கு சாதியின் பெயரால் வீடு மறுக்கப்படுகிறது. ஆரம்பத்தில் வீடு வழங்கிய வீட்டு உரிமையாளர்களும் சாதி தெரிந்தபின் பணியாளர்களை வீட்டை விட்டு வெளியேற்றுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த சாதி பகுபாட்டினால் ஒடுக்குதலுக்கு உள்ளான தூய்மைப் பணியாளர்கள், வீடு கிடைக்காமல் உடுப்பியிலிருந்து பைந்தூருக்கு 100 ரூபாய் செலவழித்து, 70 கிலோ மீட்டர்கள் தினமும் பயணிக்கின்றனர். அதிகாலை 3 மணிக்கு வேலை துவங்க வேண்டிய இந்தப் பணியாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்தப் பிரச்னை குறித்து பேசிய உடுப்பி துணை ஆணையர் டாக்டர். வித்யாகுமாரி, பைந்தூரில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான தங்குமிடங்களில் தூய்மைப் பணியாளர்களைத் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

.

Previous Post

டிச.21ல் கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு கூட்டம்..!

Next Post

நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரம் – மௌனம் கலைத்த பிரதமர் மோடி, சொன்னது என்ன?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரம் – மௌனம் கலைத்த பிரதமர் மோடி, சொன்னது என்ன?

நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரம் - மௌனம் கலைத்த பிரதமர் மோடி, சொன்னது என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In