Wednesday, October 28, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முக்கிய அப்டேட்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 23, 2023
in அரசியல் செய்திகள்
0
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முக்கிய அப்டேட்
4
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருச்சி: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கும் தேதியில் எந்த மாற்றமும் இல்லை என்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அதேநேரம் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் சொல்வதை பொறுத்து அதற்கு தகுந்தாற் போல் முடிவெடுக்கப்படும் என்றும் கூறினார்.

தமிழகத்தில் மே மாதம் என்பதால் இந்த மாதம் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் மாதம் 1-ம் தேதி திறக்கப்படும். அதேபோல தான் நடப்பு ஆண்டும் ஜூன் 1-ம் தேதி 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்றும், 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5-ல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

When will schools open in tamilnadu? minister Anbil Mahesh poiyamozhi explain

ஆனால் தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி தள்ளிப்போகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. பாமக நிறுவனர் ராமதாஸ் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்தார்.

தமிழ்நாட்டில் அண்மைக்காலங்களில் இல்லாத அளவுக்கு கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. வெப்பம் தணியும் வரை பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சியும், தமிழக அரசின் வருவாய்த்துறையும் அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய ராமதாஸ், அத்துறைகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடக்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் வேண்டுகோள் விடுத்திருந்தாக கூறியுள்ளார்.

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் 42 டிகிரி செல்சியசுக்கும் மேல் வெப்பம் வாட்டி வரும் நிலையில், பெரியவர்களே வெளியில் செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தும் சூழலில், அரசுப் பள்ளிகளை ஜுன் 1ஆம் தேதி திறப்பது எந்த வகையில் நியாயம்? என்று ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

கோடை வெப்பத்தின் கடுமை தணியும் வரை ஒரு வாரத்திற்கோ, 10 நாட்களுக்கோ அரசுப் பள்ளிகள் திறப்பை ஒத்தி வைப்பதால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்று கூறியுள்ள ராமதாஸ், கல்வியைவிட மாணவர்களின் உடல்நலன் மிகவும் முதன்மையானது. இதைக் கருத்தில் கொண்டு, அரசுப் பள்ளிகள் திறப்பை குறைந்தது ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

When will schools open in tamilnadu? minister Anbil Mahesh poiyamozhi explain

இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் செய்தியார்கள் இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர், “ஏற்கனவே உங்களுக்கு கடந்த ஆண்டு சொன்ன அதே தான்.. நோட்டு புத்தகங்கள் வழங்குவதில் தாமதம் எதுவும் இருக்கக்கூடாது என்று முதலமைச்சர் சொல்லியிருக்கிறார். அந்த வகையில் எல்லா புத்தகங்களும் மாவட்ட சிஇஒ அலுவலங்களுக்கும் போய்விட்டது. பள்ளிகள் திறக்கும் நாளிலேயே, பிள்ளைகளுக்கு என்னென்ன தேவையோ அத்தனையும் வழங்கப்படும்.பள்ளிகள் திறப்பு குறித்து கேட்கிறீர்கள். கோரிக்கைகளை சொல்லியிருக்காங்க..

பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் அலுவலகத்தில் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை. எங்களை பொறுத்தவரை திட்டமிட்டபடி ஜூன் 1-ம் தேதி 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும். 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5-ல் பள்ளிகள் திறக்கப்படும். தற்போது வரை பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை. முதலமைச்சர் அவர்கள் சொல்வதை பொறுத்து அதற்கு தகுந்தாற் போல் முடிவெடுக்கப்படும் ” இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

கோடை விடுமுறை நீட்டிக்கப்படுகிறதா?.. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது.. அன்பில் மகேஷ் பதில்

.

Previous Post

விருதுநகர் | ஓய்வுபெற்ற கல்வித் துறை அதிகாரி உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி

Next Post

அதிமுக சீனியர்ஸ் அதிருப்தி?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அதிமுக சீனியர்ஸ் அதிருப்தி?

அதிமுக சீனியர்ஸ் அதிருப்தி?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In