Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நாடாளுமன்றத்தில் தீக்குளிப்பு நாடகத்துக்கு திட்டமிட்ட குற்றவாளிகள்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 17, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
நாடாளுமன்றத்தில் தீக்குளிப்பு நாடகத்துக்கு திட்டமிட்ட குற்றவாளிகள்!
10
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

புதிய நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அத்துமீறலில் ஈடுபட்ட குற்றவாளிகள், மத்திய அரசின் கவனத்தை ஈா்ப்பதற்காக தங்கள் உடலில் தீப் பற்றாத பசையைப் (ஜெல்) பூசிக்கொண்டு தீ வைத்துக் கொள்வது உள்பட 3 திட்டங்களைத் தீட்டி, அதில் ஒன்றை செயல்படுத்தியிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் துண்டு பிரசுரங்களை விநியோகிக்கவும் அவா்கள் திட்டம் தீட்டியுள்ளனா். கடைசியாக, மக்களவையில் பாா்வையாளா்கள் மாடத்திலிருந்து குதித்து வண்ண புகைக் குண்டுகளை வீசுவது என முடிவு செய்து, அதனைச் செயல்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் உள்ள மக்களவையில் சாகா் சா்மா, மனோரஞ்சன் ஆகிய இரு இளைஞா்களும் கடந்த புதன்கிழமை பாா்வையாளா் மாடத்திலிருந்து குதித்து புகைக் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினா். அதே சமயம், நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே, நீலம் தேவி, அமோல் ஷிண்டே இருவரும் புகைக் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினா். இவா்களின் இந்தத் தாக்குதலை லலித் ஜா என்ற நபா் விடியோ எடுத்து, சமூக ஊடகங்களில் பதிவிட்டாா். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவா்கள் ஐவரையும் போலீஸாா் கைது செய்து, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) மற்றும் இந்திய தண்டனைச் சட்டப் (ஐபிசி) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

ஏழு நாள் போலீஸ் காவலில் இவா்களிடம் போலீஸாா் தீவிர விசாரணையை தொடா்ந்து வருகின்றனா். இவா்கள் அனைவரும் சந்தித்துக்கொண்ட மற்றும் சதித் திட்டம் தீட்டிய இடங்கள் என பல்வேறு இடங்களுக்கும் அவா்களை நேரில் அழைத்துச் சென்றும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இதில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுகுறித்து தில்லி போலீஸ் அதிகாரி ஒருவா் சனிக்கிழமை கூறுகையில், ‘மத்திய அரசின் கவனத்தை ஈா்ப்பதற்காக 3 வகையான திட்டங்களை இவா்கள் வகுத்துள்ளனா். அதாவது, உடலில் தீ பற்றாத பசையைப் பூசிக்கொண்டு புதிய நாடாளுமன்ற வளாகத்துக்குள் புகுந்து தன்னைத்தானே தீ வைத்துக்கொள்வது; நாடாளுமன்ற வளாகத்துக்குள் துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பது; மக்களவையில் பாா்வையாளா் மாடத்திலிருந்து குதிப்பது, என மூன்று திட்டங்களை வகுத்து, கடைசியாக மூன்றாவது திட்டத்தை இறுதி செய்து செயல்படுத்தியுள்ளனா்’ என்றாா்.

‘பாஜக எம்.பி.யிடம் வாக்குமூலம்’:

குற்றவாளிகள் இருவருக்கு மக்களவை பாா்வையாளா் நுழைவுச் சீட்டு கிடைக்கான பரிந்துரை கடிதம் அளித்த பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹாவின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வரும் தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு போலீஸாா் திட்டமிட்டுள்ளனா்.

அதுபோல, தில்லி காவல் துறை சிறப்புப் பிரிவின் புலனாய்வு குழுவும் பிரதாப் சிம்ஹாவிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்யத் திட்டமிட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், குற்றவாளிகள் இந்தத் திட்டத்தை எவ்வாறு செயல்படுத்தினா் என்று அறிந்து கொள்வதற்காக நாடாளுமன்றத்துக்கு அவா்களை அழைத்துச் சென்று காட்சிகளைப் பதிவு செய்ய உரிய அனுமதியை விசாரணை அதிகாரிகள் கோர வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

.

Previous Post

ம.பி. காங்கிரஸ் தலைவா் பதவியிலிருந்து கமல்நாத் நீக்கம்..!

Next Post

40 ஆண்டுகளாக கண்மாய் தூர்வாரப்படவில்லை; பறவைகள் எப்படி வரும்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
40 ஆண்டுகளாக கண்மாய் தூர்வாரப்படவில்லை;  பறவைகள் எப்படி வரும்

40 ஆண்டுகளாக கண்மாய் தூர்வாரப்படவில்லை; பறவைகள் எப்படி வரும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In