Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தைரியம் இருந்தால் என்னை தாக்கட்டும் : கேரள கவர்னர் அறிவிப்பால் பரபரப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 16, 2023 - Updated on December 17, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தைரியம் இருந்தால் என்னை தாக்கட்டும் :  கேரள கவர்னர் அறிவிப்பால் பரபரப்பு
11
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மலப்புரம் : கேரளாவில், கவர்னருக்கு எதிராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான, இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், ”அவர்களுக்கு தைரியம் இருந்தால் என்னை தாக்கட்டும்,” என, கவர்னர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயனுக்கும், கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே நிர்வாகம் தொடர்பான விஷயங்களில் மோதல் போக்கு நிலவி வருகிறது. மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பு செய்வதாக, கவர்னருக்கு எதிராக மாநில அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மாநிலத்தில் பல்வேறு பல்கலைகளில் உள்ள செனட் உறுப்பினர்கள் பதவிகளுக்கு பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்.,சை சேர்ந்தவர்களை அவர் நியமிப்பதாக கூறி, இந்திய மாணவர் கூட்டமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது.

சமீபத்தில் அவர் புதுடில்லி செல்வதற்காக திருவனந்தபுரத்தில் விமான நிலையம் நோக்கி காரில் சென்ற போது, அவரை வழிமறித்து எஸ்.எப்.ஐ., எனப்படும் இந்திய மாணவர் கூட்டமைப்பினர் கருப்புக் கொடி காட்சி தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கோழிக்கோடு பல்கலையில் நடக்கவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க, கவர்னர் மலப்புரம் செல்ல உள்ளார். அரசு விருந்தினர் விடுதியில் தங்கியிருந்து பின்னர் கோழிக்கோடு பல்கலை செல்ல அவர் திட்டமிட்டு இருந்தார்.

கவர்னர் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர் கூட்டமைப்பினர், ‘பல்கலையின் உள்ளே அவரை அனுமதிக்க மாட்டோம்’ என தெரிவித்திருந்தனர். இதையடுத்து, தன் திட்டத்தை மாற்றிய கவர்னர், கோழிக்கோடு பல்கலை வளாகத்தில் தங்க முடிவெடுத்துள்ளார்.

கேரளாவின் மலப்புரம் புறப்படும் முன், புதுடில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆரிப் முகமது கான் கூறியதாவது: யாராவது என் காருக்கு அருகில் வந்தால் உடனே அதை நிறுத்திவிட்டு கீழே இறங்குவேன். அவர்கள் ஏன், என் காரை தாக்க வேண்டும். அவர்களுக்கு தைரியம் இருந்தால் என்னை அடிக்கட்டும்.

அவர்கள் என்னை பயமுறுத்த நினைக்கின்றனர், நான் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் அல்ல. என்னை மிரட்டவும், கொடுமைப்படுத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். என் வழியில் ஏன் அவர்கள் குறுக்கிட வேண்டும். என்னை செயல்படவிடாமல் தடுப்பது மிகப்பெரிய குற்றம். இவ்வாறு மாநில முதல்வரின் காரில் அருகில் சென்று அவர்களால் முற்றுகையிட முடியுமா? இவ்வாறு அவர் கூறினார்.

.

Previous Post

யாருடைய வரிப்பணத்தில் இலாகா இல்லாத அமைச்சரை வைத்து இருக்கிறீர்கள்..? உதயநிதியை சீண்டிய தமிழிசை..

Next Post

ம.பி. காங்கிரஸ் தலைவா் பதவியிலிருந்து கமல்நாத் நீக்கம்..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ம.பி. காங்கிரஸ் தலைவா் பதவியிலிருந்து கமல்நாத் நீக்கம்..!

ம.பி. காங்கிரஸ் தலைவா் பதவியிலிருந்து கமல்நாத் நீக்கம்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In