புதுடில்லி : தேர்தல் கமிஷனர் நியமன மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றம்
‘தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை, பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், கேபினெட் அந்தஸ்துள்ள மத்திய அமைச்சர் ஆகியோர் அடங்கிய குழுவே தேர்வு செய்யும்’ எனவும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
முன்னதாக இது குறித்து, மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம்மேக்வால் கூறியதாவது: பார்லிமென்டில் சட்டம் இயற்றும் வரை, தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்களை, மூன்று பேர் அடங்கிய குழு தேர்வு செய்யும் என, உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
தற்போது, நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றும் வகையில், சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இதில், விதிமீறல் இல்லை. இவ்வாறு அவர் கூறி இருந்தார்.
இந்நிலையில் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்யும் மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து ராஜ்யசபா எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.


ராஜ்ய சபாவாக இருந்தாலும் லோக் சபாவாக இருந்தாலும் ஒரு நியமனம் தவறு என்றால் அதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஓட்டளிக்க வேண்டும் ஆனால் இந்த எதிர்க்கட்சிகள் அவ்வாறு செய்வதில்லை வாங்க வேண்டியத வாங்கிக் கொண்டு வெளிநடப்பு என்கிற பெயரில் மறைமுக ஆதரவு தருகின்றனர் இந்த எதிர்க்கட்சிகள் மக்களை முட்டாளாக்க முயற்சி செய்கின்றனர்