Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ரூ. 250 கோடி பண மோசடி வழக்கில் வங்கித் தலைவர் கைது!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 1, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
ரூ. 250 கோடி பண மோசடி வழக்கில் வங்கித் தலைவர் கைது!
50
SHARES
81
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram
Screenshot_2023-12-01_181440

கோப்புப் படம் | ENS

அமலாக்கத்துறை, ஜம்மு காஷ்மீர் கூட்டுறவு வங்கித் தலைவரை ரூ.250 கோடி பண மோசடி செய்த வழக்கில் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.

கூட்டுறவு வங்கியின் தலைவர் முகமது ஷாஃபி தாரின் வீடு உள்பட அவருக்குத் தொடர்புடைய இடங்களில் வியாழன் முதல் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரிவர் ஜீலம் கூட்டுறவு வீடு கட்டுமான அமைப்பு என்கிற பொய்யான நிறுவனத்துக்கு ரூ.250 கோடி கடனாகக் கொடுத்த குற்றச்சாட்டில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சோதனையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளதால் முகமது ஷாஃபியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், ரிவர் ஜீலம் வீடு கட்டுமான கூட்டுறவு அமைப்பின் தலைவர் முகமது ஹிலால் ஏ மிரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் ஊழல் தடுப்புப் பிரிவு 2020 ஆகஸ்ட்டில் இந்த ஊழலைக் கண்டறிந்து தகவலறிக்கையைப் பதிவு செய்தது.

குற்றம் சுமத்தப்பட்ட அமைப்புக்கு முறையான அனுமதியோ கூட்டுறவு சங்கப் பதிவோ வருமான வரி கணக்கோ கூட இல்லாத நிலையிலும் அந்த அமைப்பு சார்பில் வங்கியில் கோரப்பட்ட ரூ. 300 கோடிக்கான கடனை ஜம்மு காஷ்மீர் கூட்டுறவு வங்கி வழங்கியதே இந்த வழக்கிற்கான அடிப்படை.

இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களின் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

.

Previous Post

துப்பாக்கி முனையில் பையனை கடத்தி மகள்களை கட்டிவைக்கும் அப்பாக்கள் – விசித்திர நகரம்..!

Next Post

காதலன் போனில் தன் சொந்த நிர்வாண படம் உட்பட 13,000 ஆபாசபடங்களை கண்ட காதலி – கடுப்பான மகளிர் ஆணையம்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காதலன் போனில் தன் சொந்த நிர்வாண படம் உட்பட 13,000 ஆபாசபடங்களை கண்ட காதலி – கடுப்பான மகளிர் ஆணையம்.

காதலன் போனில் தன் சொந்த நிர்வாண படம் உட்பட 13,000 ஆபாசபடங்களை கண்ட காதலி - கடுப்பான மகளிர் ஆணையம்.

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    அமலாக்க துறையின் இந்த கைது நடவடிக்கை வரவேற்கப்பட வேண்டியது. இப்படி லஞ்சம் வாங்குபவர்களும் ஊழல் செய்பவர்களும் அமலாக்க துறையினால் கைது செய்யப்பட்டால் நம் நாடு மிகப்பெரிய வளர்ச்சி அடையும். ஒரு வருத்தம் இந்த சிபிஐ என்ன பண்ணிக்கிட்டு இருக்கு

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In