சென்னை மயிலாப்பூர் பகுதியிலுள்ள ‘முத்தமிழ்ப் பேரவை அரங்கில்’ விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ‘மாவீரர் நாள்’ நடைபெற்று வருகிறது.
மாலை 6.05 மணியளவில் ஈகச்சுடரை ஏற்றி வைத்து மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினார்கள். அப்போது மாவீரர் நாள் உறுதிமொழி பாடல் இசைக்கப்பட்டது. அரங்கில் உள்ள அனைவரும் எழுந்து நின்று அமைதிகாத்து அகவணக்கம் செலுத்தினர்.

