Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அடுத்த கொரோனாவிற்கு அடிகோலும் சீனா?சீனாவில் பரவும் மர்ம காய்ச்சல்..! – உலக சுகாதார அமைப்பு வார்னிங்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 24, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அடுத்த கொரோனாவிற்கு அடிகோலும் சீனா?சீனாவில் பரவும் மர்ம காய்ச்சல்..! – உலக சுகாதார அமைப்பு வார்னிங்..!
52
SHARES
84
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பீஜிங்: சீனாவில் உருவான கோவிட் வைரஸ் தொற்று உலகளவில் பரவி மக்களை அச்சுறுத்திய நிலையில் அந்நாட்டின் வடக்கு பகுதியில் குழந்தைகளை அச்சுறுத்தும் மர்மகாய்ச்சல் பரவி வருகிறது.

அந்நாட்டு சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட நிலையில் இது குறித்த தகவல்களை பகிரும்படி சீன அரசிடம் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

சீனாவில் சுவாச பிரச்னை கோளாறுகளுடன் பெரும்பாலான குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகின்றனர். இதனால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள ஏராளமான குழந்தைகளுக்கு இருமல் உள்ளிட்ட எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. ஆனால் உடலில் அதிக வெப்பநிலை மற்றும் நுரையீரல் தொற்று இருப்பதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

இது தொடர்பாக சீன தேசிய சுகாதார அதிகாரிகள் கூறுகையில் கோவிட் கட்டுப்பாடுகளை தளர்த்தியதன் எதிரொலியாகவே இந்த புதிய தொற்று ஏற்பட்டுள்ளது என்றனர்.

இச்சூழ்நிலையில் சார்ஸ் கோவ் -2 வைரஸ் பரவல் இன்ப்ளூயன்சா வைரஸ் பரவல் இன்னும் பிற தொற்றுகள் நிலவரம் குறித்து அறிக்கை அளிக்கும்படி உலக சுகாதார அமைப்பு சீன அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் அந்த அமைப்பு சீன மக்கள் பரிந்துரை செய்யப்பட்ட தடுப்பூசி போட்டுக் கொண்டு சுவாச பிரச்னை நோய் அபாயத்தை குறைக்க வேண்டும். தொற்று உள்ளவர்கள் வீட்டியே இருப்பதுடன் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனக்கூறியுள்ளது.

சீனாவில் இத்தொற்று பரவுவது உலக நாடுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

.

Previous Post

குடும்ப தகராறில் பாம்பை விட்டு மனைவி, குழந்தையை கொன்ற கொடூர கணவன்..!

Next Post

செய்தியாளர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
செய்தியாளர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு..!

செய்தியாளர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In