PDP என்கிற ஒரு WhatsApp க்ரூப்பில் தமிழ்நாடு முன்னாள் DGPயும் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நடராஜ் ஒரு உண்மைக்கு புறம்பான செய்திகளை தொடர்ந்து பரப்பிக் கொண்டிருக்கிறார்.
அதாவது அதே WhatsApp groupல் “இந்துக்கள் வாக்களித்ததுதான் வெற்றிபெற வேண்டுமென்றால் அப்படி ஒரு வெற்றி தேவையில்லை. இந்துக்கக்களின் வாக்குகளை பெறும் அளவிற்கு திராவிட முன்னேற்ற கழகம் தரம் தாழ்ந்துவிடவில்லை” என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் சொல்லாத ஒரு செய்தியை சொல்லியதாக அதை நியூஸ் 7 தமிழ் செய்தி நிறுவனம் தன் செய்தி கார்டில் போட்டதை போல் ஒரு பொய்யான செய்தியை பரப்பி இருக்கிறார். அதை அனைவருக்கும் பரப்பவும் வலியுறுத்தி இருக்கிறார்.


இதைதான் ஸ்டாலின் இன்று குறிப்பிட்டு பேசியுள்ளார். மேலும் நடராஜ் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் முதல்வர் கூறினார்.


ஒரு காவல்துறையின் உயர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றவரும் ஒரு முன்னாள் சட்டமன்ற எம்எல்ஏ ஆன திரு நட்ராஜ் அவர்கள் பரப்பியது வதந்தியாக இருக்காது என்றே கருதுகிறேன் அப்படி வதந்தி என்று முதல்வர் உறுதிப்படுத்தினால் வழக்கு தொடரட்டும் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளட்டும் இந்துக்களுக்கு எதிரான கருத்துக்களையே பேசி வரும் நம் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இப்பொழுது திரு நடராஜ் அவர்களின் பேட்டியை பார்த்து அதாவது இந்துக்களை பார்த்து பயப்படுகிறார் என்பதே உண்மை