சமூக வலைதளங்களில் இன்று தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள், அண்ணாமலை போன்றோர் கருத்துகளை சொல்லியிருந்தால் கூட வருத்தப்பட்டிருக்கமாட்டேன்.
ஆனால் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாம் கோயில்களை கொள்ளை அடித்து கொண்டிருப்பதாக பேசி உள்ளார். திமுக ஆட்சியில் இதுவரை ரூ.5,500 கோடி மதிப்புள்ள கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.
உண்மையில் நிர்மலா சீதாராமனுக்கு பக்தி இருந்திருந்தால் அப்படி பேசியிருக்க மாட்டார்; நிர்மலா சீதாராமனுக்கு இருப்பது பக்தி இல்லை, அது பகல் வேஷம்.. என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

