புதுடெல்லி: ராசியில்லாதவர் மற்றும் பிக்பாக்கெட் என கேலி செய்ததற்காக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு இந்திய தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நவம்பர் 25 ஆம் தேதிக்குள் ராகுல் காந்தி பதிலளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது. ஆனால் அவர் யாருடைய பெயரையும் குறிப்பிட்டு கூறவில்லை.
ராகுல் காந்தியின் கருத்துக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்ததை அடுத்து இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் நடைபெற்ற பேரணியில் பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி தோல்வியடைந்ததற்கு “ராசியில்லாதவர் அவர்” என்று பொதுவாக கூறியிருந்தார்.

