புதுடில்லி: அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி அளித்துள்ளார்.
இது குறித்து பியூஷ் கோயல் கூறியிருப்பதாவது: நமது பொருளாதாரம், 3.5 டிரில்லியன் டாலரில் இருந்து, 35 டிரில்லியன் டாலராக உயரும். இதற்கான பணியை பிரதமர் மோடி தலைமையிலான பாஜ., அரசு செய்து வருகிறது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு 10வது பெரிய பொருளாதார நாடாக இருந்த இந்தியா, தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது.
அடுத்த மூன்று ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றுவோம். காங்கிரஸ் ஆட்சியின் போது இந்தியா பலவீனமான ஐந்து பொருளாதார நாடுகளில் ஒன்றாக இருந்தது. இப்போது உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக மாறியுள்ளது.
“ஊழல்” மற்றும் “குடும்ப ஆட்சி” காரணமாக சந்திரசேகர ராவ் மீது தெலுங்கானா மக்கள் கோபமாக இருக்கின்றனர். வரும் தேர்தலில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தோல்வி அடைவார். இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.


சும்மா பொய் பேசாதீங்க பியூஸ் கோயண.ல் தாங்கள் ஆட்சிக்கு வரும்போது அதாவது 10 வருடங்களுக்கு முன்பு 2014 டாலரின் மதிப்பு 55 ரூபாயாக இருந்தது ஆனால் இப்போது டாலரின் மதிப்பு 84 ரூபாய்க்கு மேலே சென்று விட்டது பத்து வருடத்தில் டாலரின் மதிப்பு 30 ரூபாய் கூடி இருக்கிறது அதாவது இந்திய ரூபாய் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து இருக்கு இதிலிருந்து தெரிகிறது 10 வருடத்தில் நம் இந்தியா கடுமையான வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது ஒரு நாட்டின் டாலர் மதிப்பை வைத்து அந்நாட்டின் வளர்ச்சியை கணக்கிடலாம் இதில் தாங்கள் இன்னும் 25 வருடம் என்று சொல்கிறீர்கள் இதை நம்பினால் இந்தியா ஒரு கேவலமான பிச்சைக்கார நாடாகவே மாறும் இன்னும் தங்களது ஆட்சி ஆறு மாதம் உள்ளது அதற்குள் டாலரின் மதிப்பை குறைக்க முயற்சி செய்யுங்கள். இல்லையென்றால் தங்களின் பி ஜே பி கட்சி இன் மதிப்பு தானாகவே மிக வேகமாக குறைந்து விடும்