குடியாத்தம் குமரனை கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாலும், திமுகவுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதாலும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து கடந்த 2019ஆம் செப்டம்பர் மாதம் திமுகவிலிருந்து குடியாத்தம் குமரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பல மாதங்களாக அவர் மீண்டும் திமுகவில் இணைய பல முயற்சிகள் எடுத்தும் எதுவும் பலனளிக்காததால் ஆ.ராசாவின் உதவியை நாடினார். ஆ.ராசாவை பொறுத்தவரை சொற்பொழிவாளர்களை கைவிடாதவர் என்பதால் திமுக தலைமையிடம் பேசி மீண்டும் குடியாத்தம் குமரனை கட்சிக்குள் கொண்டு வந்ததோடு, கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியையும் பரிந்துரைத்து பெற்றுக்கொடுத்தார்.
இதனிடையே சமூக வலைதளங்கள் மூலம் எதிர்கட்சிகளுக்கு சற்று காட்டமான முறையில் அண்மைக்காலங்களாக பதிலடிகளை கொடுத்து வந்தார் குடியாத்தம் குமரன். இந்நிலையில் மீண்டும் என்ன நடந்ததோ தெரியவில்லை, இன்று இரண்டாவது முறையாக குடியாத்தம் குமரனை கட்சியிலிருந்து கட்டம் கட்டியிருக்கிறார் அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன்.
அதற்கு பதிலயடியாக கோபமடைந்த குடியாத்தம் குமரன் 2 நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் பேசியிருக்கிறார். மேலும் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் மற்றும் அமைச்சரின் தம்பி சிங்காரம் இருவரும் மணல் மாபியா கும்பலிடம் தொடர்பு வைத்துக்கொண்டு மாதா மாதம் 300 கோடி பெறுவதாக பேசிய ஆடியோ என்னிடம் இருப்பதாக கூறிய அதிர்சியூட்டும் தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அமைச்சர் துரைமுருகனின் மனநிலை, மகனின் பேச்சை கேட்டு ஏன்டா குமரனை நீக்கினோம் என்று குழம்பி தவிக்கிறாராம். குமரனின் வேண்டப்பட்டவர்களிடம் மறைமுகமாக அமைச்சரின் டீம் டீல் பேசி வருகிறதாம்.
10 க்கும் மேற்பட்ட வீடியோ ஆடியோ தன்னிடம் உள்ளதாக குடியாத்தம் குமரன் மிரட்டல் தோரணையிலும் பேசி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் கனிம வளங்கள் சுரண்டப்படுமா காப்பாற்றப்படுமா? பொறுத்திருந்து பாப்போம்….

