புதுடில்லி: பாலஸ்தீன மக்களுக்கு 32 டன் நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு இந்திய விமானப் படையின் சி17 விமானம் எகிப்தில் உள்ள எல்- அரிஷ் விமான நிலையத்திற்கு புறப்பட்டது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
நிவாரணப் பொருட்கள் கிளம்பியது!
அமைச்சர் ஜெய்சங்கர் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம்.

இந்திய விமானப்படையின் சி 17 விமானம் 32 டன் நிவாரணப் பொருட்களை எகிப்தில் உள்ள எல்- அரிஷ் விமான நிலையத்திற்கு புறப்பட்டது. இவ்வாறு அந்த பதிவில் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.



இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவு தருகிறது அதாவது இந்த போரில். ஆனால் பாலஸ்தீன மக்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைக்கிறது இந்தியாவின் நிலைப்பாட்டை புரிந்து கொள்ளவே முடியவில்லை