பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம், ஹரியானா மாநிலத்தில் வசிப்பவர்களுக்கு தனியார் துறை வேலைகளில் 75% இடஒதுக்கீடு வழங்கும் ஹரியானா அரசின் சட்டத்தை ரத்து செய்ததை அடுத்து, பாரதிய ஜனதா கட்சி (BJP) – ஜனநாயக்க ஜனதா கட்சி (JJP) கூட்டணி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தங்கள் எதிர்ப்பை அதிகரித்துள்ளன.
இந்த வழக்கை நீதிமன்றத்தில் வலுவாக தொடராததற்கு ஹரியானா அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இதனிடையே, உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர ஹரியானா அரசு திட்டமிட்டுள்ளது.
சனிக்கிழமையன்று, துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா, வேலைவாய்ப்புச் சட்டம் குறித்த பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு விரைவில் உச்ச நீதிமன்றத்தை அணுகும் என்று கூறினார். “உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம், அதன் பின்னரே அரசாங்கம் உச்ச நீதிமன்றத்திற்குச் செல்லும்,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“அரியானா இளைஞர்களுக்கு வேலை வழங்குவதற்கும், தொழில்களை மேம்படுத்துவதற்கும் வேலைவாய்ப்பு சட்டம் மிகவும் முக்கியமானது. தொழில்துறையினரின் சம்மதத்துடனும் ஆலோசனையுடனும் தான் அரசாங்கம் சட்டத்தை இயற்றியுள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.

