Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

‘பணம் கொடுத்தால் தான் பணியிடம் :’ குமாரசாமி பாய்ச்சல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 18, 2023 - Updated on November 19, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
‘பணம் கொடுத்தால் தான் பணியிடம் :’ குமாரசாமி பாய்ச்சல்
8
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பெங்களூரு :”பணம் கொடுத்தால்தான், கேட்ட பணியிடம் வழங்கப்படும் என்ற என் புகாரை நிரூபிக்கும் வகையில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்ற பட்டியல் வந்துள்ளது,” என, கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றஞ்சாட்டினார்.

கர்நாடகாவில் சமீபத்தில் முதல்வர் சித்தராமையா மற்றும் அவரது மகன் யதீந்தரா மொபைல்போனில் பேசினர்.பொதுவெளியில் இவர்கள் பேசியது தொடர்பான, ‘வீடியோ’வை வெளியிட்டு, ‘பணம் கொடுத்தால் பணியிடமாற்றம் வழங்கப்படுகிறது’ என, மதச்சார்பற்ற ஜனதா தள மாநில தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி குற்றஞ்சாட்டினார். ஆனால், வருணா தொகுதியில் உள்ள பள்ளிகளை மேம்படுத்துவது தொடர்பாகவே, தன் மகன், தன்னிடம் பேசியதாக சித்தராமையா கூறினார்.

இந்நிலையில், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குமாரசாமி கூறியுள்ளதாவது: பணம் கொடுத்தால்தான் கேட்ட பணியிடம் கிடைக்கும் என்று நான் கூறியது பொய் என்று முதல்வர் கூறியுள்ளார். இதற்கான ஆதாரங்களை நான் வெளியிட்டுள்ளேன். சித்தராமையா மற்றும் அவரது மகன் உரையாடலில், விவேகானந்தா என்ற பெயரை குறிப்பிட்டுள்ளனர். மேலும், பணம் தொடர்பாகவும் அவர்கள் பேசியுள்ளனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர்களை பணியிடமாற்றம் செய்து , , 13 பேர் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாநில உளவுப் பிரிவில் பணியாற்றும் விவேகானந்தா, மைசூரில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதில் இருந்து நான் கூறியது உண்மை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்து, முதல்வர் சித்தராமையை, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:நாங்கள் பேசிய விவேகானந்தா, வட்டார கல்வி அதிகாரி. அங்குள்ள பள்ளியை மேம்படுத்துவது தொடர்பாகவே, நானும், என் மகனும் பேசினோம். ஆனால், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பட்டியலை வைத்து, குமாரசாமி பொய் தகவலை பகிர்ந்துள்ளார்.தன் வாழ்நாளில் இனி ஆட்சியை பிடிக்க முடியாது என்பதால், குமாரசாமிக்கு புத்தி பிசகியுள்ளது. அவரது நலம்விரும்பிகள் யாராவது இருந்தால், அவருக்கு உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யவும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

.

Previous Post

நாட்டிலேயே ராஜஸ்தானில்தான் பெட்ரோல் விலை அதிகம்: மத்திய அமைச்சர்

Next Post

மோடி எவ்வளவு முயற்சி செய்தாலும் வெற்றி பெற முடியாது. – கார்கே பேச்சு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மோடி எவ்வளவு முயற்சி செய்தாலும் வெற்றி பெற முடியாது. – கார்கே பேச்சு!

மோடி எவ்வளவு முயற்சி செய்தாலும் வெற்றி பெற முடியாது. - கார்கே பேச்சு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In