இன்றைய தேதியான நவம்பர் 18ல் தான் ( 2002) – நம்ம சென்னை புறநகர் பேருந்து நிலையம் கோயம்பேட்டில் திறக்கப்பட்டுச்சு.
சென்னை புறநகர் பேருந்து நிலையம் சென்னை மாநகரின் கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள ஒரு மிகப்பெரிய பேருந்து நிலையம். 37 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பேருந்து நிலையம் ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும். ஐ.எஸ்.ஓ 9001:2000 தரச் சான்றிதழும் இப்பேருந்து நிலையம் பெற்றுள்ளது. இப்பேருந்து நிலையம் 103 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது.
ஒரே சமயத்தில் 270 பேருந்துகளையும், நாளொன்றுக்கு 2000 பேருந்துகளையும் 2 லட்சம் பயணிகளையும் கையாளும் திறன் கொண்டது. தி. மு. க. ஆட்சியில் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்ட இப்பேருந்து நிலையம் மருத்துவ மனையாக மாற்றப் படாமல் 2002 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் நாளன்று அப்போதைய தமிழக முதலமைச்சர், ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது !
இப்பேருந்து நிலையத்துக்கு தற்போது புரட்சித் தலைவர் டாக்டர் எம்..ஜி.ஆர் பேருந்து நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்குது
இதனிடையே வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் ஆம்னி பேருந்துகளுக்கான பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட உள்ளதால் இந்த கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் மூடப்படுகிறது என்றொரு செய்தி பரவியது.. விசாரித்த போது அதெல்லாம் வதந்தி என்று பதில் கிடைச்சுது..


கோயம்பேடு பேருந்து நிலையம் தொடர்ச்சியாக செயல்படுவதையே மக்கள் பெரிதும் விரும்புகின்றனர் எனவே கோயம்பேடு பேருந்து நிலையம் மூடப்படுவது என்பது மறுபரிசீலனை செய்ய வேண்டும்