Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஓடுதளத்திற்குள் தெருநாய்! திருப்பியனுப்பப்பட்ட விமானம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 14, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஓடுதளத்திற்குள் தெருநாய்! திருப்பியனுப்பப்பட்ட விமானம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Screenshot_2023-11-14_122602

கோப்புப்படம்

 

கோவா விமான நிலையத்தின் ஓடுதளத்திற்குள் தெருநாய் நுழைந்ததால் தரையிறங்க வேண்டிய விஸ்தாரா விமானம் பெங்களூருவிற்கு திருப்பியனுப்பப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கடந்த திங்கள் கிழமையன்று மதியம் 12.55 மணியளவில், விஸ்தாரா விமானம் யுகே 881 பெங்களூரிலிருந்து கோவாவிற்குக் கிளம்பியது. ஆனால் தெருநாய் ஒன்று கோவா விமானநிலையத்தின் ஓடுதளத்திற்குள் நுழைந்ததால் தரையிறங்க முடியாமல் திரும்பிச்சென்று மதியம் 03.05 மணியளவில் மீண்டும் பெங்களூரில் தரையிறங்கியுள்ளது.

‘அதிகாரிகள் ஓடுதளத்திற்குள் தெருநாய் நுழைந்ததை உறுதி செய்தபின் விமானத்தைத் தரையிறக்க வேண்டாம் என்றும் சற்று நேரம் காத்திருக்கும் படியும் விமானிக்கு அறிவுறுத்தப்பட்டது. பின்னர் விமானி, பாதுகாப்புக் கருதி மீண்டும் பெங்களூருவிற்கே திரும்பிவிட விரும்பியதால் விமானம் திருப்பியனுப்பப்பட்டதாக கோவா விமானநிலையத்தின் இயக்குநர் எஸ்.வி.டி தனம்ஜெய ராவ் தெரிவித்தார்.  

இதையும் படிக்க : மணல் குவியலில் கார் மோதி விபத்து

மீண்டும் மாலை 4.55 மணிக்கு பெங்களூருவிலிருந்து கிளம்பிய விமானம் 6.15 மணிக்கு கோவாவில் பாதுகாப்பாக தரையிறங்கியது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்த தகவல்களை விஸ்தாரா நிறுவனம் உடனுக்குடன் தன் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. விமானம் திருப்பி அனுப்பப்பட்டது மற்றும் மீண்டும் பெங்களூருவிலிருந்து கிளம்பிய தகவல்கள் விஸ்தாராவின் எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளன. 

இதுகுறித்து மேலும் பேசிய இயக்குநர் ராவ், இது போன்று தெருநாய்கள் ஓடுதளத்திற்குள் நுழைந்துவிடும் சம்பவங்கள் எப்போதாவது நடப்பதுண்டு. தகவல் அறிந்தபின் ஊழியர்களைக் கொண்டு உடனே அந்த பிரச்னை சரி செய்யப்பட்டது எனவும் தெரிவித்தார். எனது பதவிக் காலத்தில் இது போன்ற பிரச்னைகள் நடப்பது இதுவே முதல்  எனவும் தெரிவித்துள்ளார். 

செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…





.

Previous Post

காசா நகர கட்டுப்பாட்டை இழந்தது ஹமாஸ்: இஸ்ரேல்

Next Post

காங்கிரசின் பொய் வாக்குறுதிகள் எடுபடாது: பிரதமர் மோடி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காங்கிரசின் பொய் வாக்குறுதிகள் எடுபடாது: பிரதமர் மோடி

காங்கிரசின் பொய் வாக்குறுதிகள் எடுபடாது: பிரதமர் மோடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In