Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அலிகார் நகரத்தின் பெயரை மாற்ற முடிவு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 13, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஷாரூக்கானிடம் பணம் பறித்த வழக்கு :முன்னாள் அதிகாரியை கைது செய்ய தடை நீட்டிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அலிகார்: உத்தர பிரதேசத்தின் முக்கிய நகரமான அலிகாரின் பெயரை, ஹரிகர் என்று மாற்ற, மாநகராட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு ஆட்சியில் உள்ளது. இங்கு 2018ல் அலகாபாத் நகரின் பெயர் பிரயாக்ராஜ் என்றும், பைசாபாத் மாவட்டம், அயோத்யா மாவட்டம் என்றும் மாற்றப்பட்டன. மேலும், தேவை என்றால் பிற ஊர்களின் பெயரும் மாற்றப்படும் என, முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அலிகார் மாநகராட்சியில் நேற்று, அந்த நகரின் பெயரை ஹரிகர் என மாற்றும் தீர்மானத்தை மேயர் பிரசாந்த் சிங்ஹால் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தை அனைத்து கவுன்சிலர்களும் ஆதரித்ததால், தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தை மாநில அரசின் ஒப்புதலுக்காக அனுப்ப உள்ளனர். மாநில அரசு அதனை ஏற்றால், பின், மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் பிற தொடர்புடைய துறைகளுக்கு அனுப்பப்படும். அவர்களின் ஒப்புதலுக்கு பிறகு மாநில அரசு அதிகாரப்பூர்வமாக பெயரை மாற்றலாம்.

இது பற்றி மேயர் பிரசாந்த் சிங்ஹால் கூறுகையில், ‘அலிகார் பெயரை ஹரிகர் என மாற்ற வேண்டும் என்பது, இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. ஏற்கனவே இந்த நகருக்கு ஹரிகர் என்ற பெயர் தான் இருந்தது; புராணங்களிலும் இந்த பெயர் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. காலப்போக்கில் அலிகார் என மாற்றப்பட்டு விட்டது.

தற்போது பழம் பெருமையை மீட்டும் வகையில் மீண்டும் ஹரிகர் என பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது,” என்றார்.

அலிகார்: உத்தர பிரதேசத்தின் முக்கிய நகரமான அலிகாரின் பெயரை, ஹரிகர் என்று மாற்ற, மாநகராட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத்


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper



.

Previous Post

உத்தரகாண்ட்: சுரங்கப்பாதைகளை இடிபாடுகளை அகற்றும் பணி தீவிரம்

Next Post

இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In