Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தமிழக, பஞ்சாப் கவர்னருக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 10, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
தமிழக, பஞ்சாப் கவர்னருக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
18
SHARES
29
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

புதுடில்லி: தமிழகம் மற்றும் பஞ்சாப் அரசு கவர்னர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

தமிழக கவர்னர் ரவி, அரசு உத்தரவுகளை நிறைவேற்றுவதில் தாமதம் செய்கிறார். மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கவர்னர் கிடப்பில் போடுவதால், அரசு பணிகள் முடங்கி உள்ளது. கவர்னர் ஒப்புதல் அளிக்க கால வரம்பு நிர்ணயம் செய்ய உத்தரவிட வேண்டும்.

அரசியல்சாசனம் வழங்கி உள்ள அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக கூறி கவர்னர் ரவிக்கு எதிராக தமிழக அரசு சார்பில், கடந்த அக்.,30ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தஹி மற்றும் அபிஷேக் சிங்வி ஆகியோர் ஆஜர் ஆனார்கள்.

தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டதாவது: மசோதாக்களை கிடப்பில் போட்டு அரசின் செயல்பாடுகளை கவர்னர் முடக்குகிறார். தமிழகம் முதல் காஷ்மீர் வரை கவர்னர்களின் பிரச்னைகளை சொல்லும் வகையில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

2020ம் ஆண்டு முதல் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதா கிடப்பில் போட்டுள்ளார். பணி நியமனம் தொடர்பாக எந்த ஒரு கோப்புக்கும் அனுமதி கொடுக்க மறுக்கிறார். கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் கோப்புக்கு கூட அனுமதி இல்லை என வாதிடப்பட்டது.

இதனையடுத்து, நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு கூறுகையில், கவர்னருக்கு எதிரான வழக்கை முக்கியமானதாக பார்க்கிறோம். சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை கவர்னர்கள் நிறுத்தி வைக்க முடியாது. கவர்னரின் செயலாளர், உள்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், மனு குறித்து மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர். வழக்கை நவம்பர் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

பஞ்சாப் கவர்னர் செயல்பாடு: நீதிபதிகள் அதிருப்தி

பஞ்சாப் கவர்னருக்கு எதிராக அம்மாநில அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு கூறுகையில், ‛‛ பஞ்சாப் அரசு கவர்னர் செயல்பாடு கவலை அளிக்கிறது. பஞ்சாப் அரசும், கவர்னரும் அரசியல் சாசனத்தை சீர்குலைக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

நீங்கள் நெருப்புடன் விளையாடுகிறீர்கள்? மாநில அரசு அனுப்பிய மசோதாவை எப்படி கிடப்பில் போட முடியும்?. அரசின் செயல்பாடுகளை எவ்வாறு முடக்க முடியும்? கவர்னருக்கு இதுபோன்ற அதிகாரங்களை கொடுத்தது யார்? நடப்பது மிக கவலையளிக்கிறது எனக்கூறினர்.

.

Previous Post

பாஜக தேர்தல் பிரசாரத்தின் ஒருபகுதியே அமலாக்கத்துறை சோதனைகள்: ஆனந்த் சர்மா விமர்சனம்

Next Post

தில்லி : பேருந்து ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதால் விபத்து!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தில்லி : பேருந்து ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதால் விபத்து!

தில்லி : பேருந்து ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதால் விபத்து!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    கவர்னர்களூக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் இந்த வழக்குகளை சட்ட நிபுணர்களும் பத்திரிகையையாளர்களும் வழக்கறிஞர்களும் கண்காணித்துக் கொண்டே உள்ளனர் தீர்ப்பின் போது இந்த வழக்கை உதாரணமாக வைத்து அதாவது எடுத்துக்காட்டாக வைத்து வேறு வழக்கு தொடுக்க உதவியாக இருக்கும் என்பதால். மேலும் கவர்னர் மேல் வழக்கு தொடுக்க வேண்டுமானால் ஜனாதிபதியிடம் அனுமதி வாங்க வேண்டும் இந்த வழக்கில் ஜனாதிபதி அனுமதி கொடுத்துவிட்டார் என்றே தெரிகிறது இவை எல்லாமே உச்ச நீதிமன்றத்தின் உத்தரவில் வந்துவிடும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In